Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019 : பெங்களூரு அணியை இறுதியில் வெற்றி பெற வைப்பாரா பயிற்சியாளர் குவாட்ரெட்?

மும்பை : கால்பந்து பயிற்சியாளர் ஆல்பர்ட் ரோகா கடந்த சீசன் முடிவில் பெங்களூரு எஃப்சி அணியுடன் தனது ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்ளாதபோது, சாம்பியன் பட்டத்திற்கான தேர்வு வெளிப்படையாக இருந்தது என்றே கூறவேண்டும்.

ஆனால் பெங்களூரு அணி நிர்வாகிகள் அனைவருக்கும் தெரிந்த முகமான கார்லஸ் குவாட்ரெட்டைத் பயிற்சியாளராக தேர்ந்தெடுத்தனர்.

ISL 2019 - Will Cuadrat bring the victory for Bengaluru FC at ISL finals?

ஸ்பானிநார்ட் பயிற்சி மையத்தில் ஒரு பகுதியாக இருந்தது மட்டுமல்லாமல் இந்திய கால்பந்து கிளப்களில் ஓர் உயர்ந்த இடத்தில் குவாட்ரெட் இருந்தார் என்பது அவரை தேர்வு செய்ததற்கு காரணமாக அமைந்தது.

குவாட்ரெட்டின் தேர்வு மிகச் சரியானதே. ஆனால் அவர் ஆல்பர்ட் ரோகாவிற்கு ஈடாகுமா என்ற கேள்வியும் எழுந்தது. பெங்களூரு அணி வீரர்கள் ரோகா மற்றும் ஆஷ்லே வெஸ்ட்வூட் போன்ற முன்னணி பயிற்சியாளர்களைப் போல் குவாட்ரெட்டுக்கு மதிப்பளிப்பார்களா? இப்படி பல கேள்விகள் எழுந்தாலும் பெங்களூரு அணி மீது எந்த சந்தேகமும் இல்லை என்றே கூற வேண்டும்.

பெங்களூரு அணி இதை சரியாக நிரூபித்திருக்கிறார்கள். கடந்த சீசனின் இறுதிப் போட்டியில் ஹீரோ இந்திய சூப்பர் லீக் கோப்பையை இழந்த பிறகு, பெங்களூரு அணியினர் குவாட்ரெட் தலைமையில் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்று தணியாத தாகத்துடன் செயல்பட்டு வந்தனர்.

பெங்களூரு அணியின் ஒற்றுமை, போராட்ட குணம், போன்றவை இந்த சீசனில் கடினமான விளையாட்டையும் இலகுவாக கடந்து வெற்றி பெறச் செய்ததது. இந்த கடின உழைப்புதான் இந்த சீசனில் கோவா மற்றும் நார்த் ஈஸ்ட் அணியை வெற்றி கொள்ள வைத்தது.

அடுத்து எங்கள் வேலை ஒன்றே ஒன்றுதான். அது இறுதிப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதே. கோவா அணி ஒரு சிறந்த அணி என்பதால் இறுதிப் போட்டி மிக கடினமாக இருக்கும் என்கிறார் பெங்களூரு அணியின் பயிற்சியாளர் குவாட்ரெட்.

கடந்த சீசன்களைவிட தற்போதுள்ள பெங்களூரு அணி சற்று வித்தியாசமானது. போட்டி முடிவுகளைப் பொறுத்த வரை இந்த அணி எப்போதுமே உயர்ந்து நிற்கும். கடந்த சீசனில் ஆல்பர்ட் ரோகாவின் தலைமையின் கீழ், பெங்களூரு அணி லீக் போட்டிகளில் அரங்கில் ஆதிக்கம் செலுத்தியது மேலும், இறுதிப் போட்டியைக் கைப்பற்றியது.

ஆதனால்தான் இந்த சீசனில் பெங்களூரு அணி இறுதிப் போட்டியில் பங்கேற்கும் என்பதில் சந்தேகமும் தோன்றவில்லை.

மிக்கு மற்றும் சுனில் ஷட்டரி தலைமையில் கடந்த சீசனில் பெங்களூரு அணி சிறப்பாக விளையாடியது. ஆனாலும் அணியின் கூட்டு முயற்சியே வெற்றிக்கு காரணம் என சொல்கிறார் குவாட்ரெட்.

பெங்களூரு அணியைப் பொறுத்தவரை ஹர்மான்ஜாட் காப்ரா ஒரு சிறந்த மிட்பீல்டர். உதாந்தா சிங் தனது மூன்றாவது இறுதிப் போட்டியில் இருந்து சிறப்பாக விளையாடி வருகிறார். ரிக் பர்தலால் ஒரு கட்டத்தில் காயம் ஏற்பட்ட போதும் டிமஸ் டெல்டோடோ மிட்ஃபீல்டுக்கு அதிக பொறுப்பை எடுத்துக் கொண்டார்.

இறுதிப் போட்டி கண்டிப்பாக சற்று வித்தியாசமாக இருக்கும். கோவா அணிக்கு எதிராக எப்படி விளையாட வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் எங்களைப் பற்றிதான் எங்களுக்கு கவலை. நாங்கள் இங்கு கடுமையாக பயிற்சி எடுத்து வருகிறோம். நாங்கள் இறுதிப் போட்டியில் விளையாடுவது வெகு சிறப்பானது என்கிறார் டிமாஸ் டெல்காடோ.

இறுதிப் போட்டியில் மோதப் போகும் பெங்களூரு அணி சிறப்பானது ஆகும். அது அந்த அணிக்கு மிகவும் பெருமை வாய்ந்ததாகும். மும்பை அரினா அரங்கில் வரும் ஞாயிற்றுக் கிழமை பெங்களூரு அணியின் வெற்றிப் பயணம் தொடரும்.

(Photos Courtesy - ISL)

Story first published: Friday, March 15, 2019, 18:49 [IST]
Other articles published on Mar 15, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+