For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ISL 2019 : ஐஎஸ்எல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்லுமா கோவா?

கோவா : ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் கடந்த நான்கு சீசன்களில் கோவா அணி வெற்றி வாய்ப்பை இழந்தாலும், இந்த முறை பிளே ஆஃப் சுற்றுவரை முன்னேறியுள்ளது மற்ற அணிகளுக்கு பொறாமையைக் கொடுத்துள்ளது.

2014 ஆம் ஆண்டு ஐஎஸ்எல் போட்டி தொடங்கியதில் இருந்து அதன் பயிற்சியாளர்கள் ஸிகோ மற்றும் செர்ஜியோ லோபிரோ ஆகியோர் கோவா அணியை சிறப்பாக நடத்தி வருகின்றனர். கடந்த 5 சீசன்களில் 4 -ல் கோவா அணி பிளே ஆஃப் சுற்று வரை முன்னேறியது.

ISL 2019 - Will Goa win the title in this season?

அதுவும் கடந்த சீசனில் சென்னை அணியுடன் மோதும்போது தோற்றுவிட்டது.

அதே நேரத்தில் கோவா அணியின் சாதனையை ஏடிகே மற்றும் சென்னை அணிகளுடன் ஒப்பிட்டுப் பேசுவதற்கு வேறு எந்த அணியும் இல்லை என்றே சொல்லாம். இந்த சீசனைப் பொறுத்தவரை கோவா அணியின் ஆட்டம் அதிரடியானது. இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை மற்றும் ஏடிகே அணிகளை கோவா அணி வீரர்கள் இலகுவாக வெற்றி கொண்டனர்.

தலா இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை மற்றும் ஏடிகே அணிகள் இந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கே முன்னேறவில்லை.

ISL 2019 - Will Goa win the title in this season?

கடந்த 5 சீசன்களில் 148 புள்ளிகளைப் பெற்ற சென்னை அணிக்குப் பிறகு கோவா அணி அதிக பட்சமாக 126 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 2015 ஆம் ஆண்டைத் தவிர கோவா அணி மற்ற சீசன்களில் பிளே ஆஃப் சுற்று வரை சென்றுள்ளது. கோவா அணியின் ஆட்டம் வெகு சிறப்பாக இருந்துள்ளது.

கோவா அணியின் சூப்பர் ஆட்டம் பிரேசிலிய நட்சத்திரமான ஸிக்கோவின் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கியது. அவர் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட பின் கோவா அணி 2014 ஆம் ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. 2015 ஆம் ஆண்டு ஏடிகே அணியுடன் தோற்றாலும் வீரர்கள் நன்றாக விளையாடினர்.

அதே போல் கடந்த ஆண்டு சென்னை அணியுடன் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் லீக்கின் இரண்டாவது இடத்தை கைப்பற்றினர். அதற்கு அடுத்த இரண்டு சீசன்களிலும் லோபிரா தலைமையில் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

லோபிரோ கோவா அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பின் வீரர்களின் ஆட்ட பாணியில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். இதையடுத்து அவர்களின் ஆட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

ISL 2019 - Will Goa win the title in this season?

நாங்கள் தடுப்பாட்டத்தில் தற்போது நன்கு முன்னேறியுள்ளோம் இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனாலும் நாங்கள் இன்னும் பல வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். எங்களது எண்ணம், சிந்தனை என அனைத்தையும் ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் லோபிரா.

குழப்பங்கள் நிறைந்த இந்த சீசனின் அணிகளில் கோவா அணி தனித்து நிற்கிறது. அந்த அணியின் முன்பு தற்போது உள்ள பெரும் சவால் என்னவென்றால் சாம்பியன் பட்டத்தை வெல்வதுதான். அந்தப் பட்டத்தை வென்று ரசிகர்களை கொண்டாடச் செய்ய வேண்டும் என்பதே அந்த அணியின் விருப்பமாக உள்ளது.

(Photos Courtesy - ISL)

Story first published: Monday, February 25, 2019, 15:42 [IST]
Other articles published on Feb 25, 2019
English summary
ISL 2019 - Will Goa win the title in this season?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+