Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெங்களூருவின் இந்திய வீரர்கள்.. கோவாவின் வெளிநாட்டு வீரர்கள்.. இறுதிப் போட்டியில் யாருக்கு வெற்றி?

மும்பை : ஐஎஸ்எல் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் கடந்த சீசனில், தொடக்கத்தில் இருந்தே புள்ளி அட்டவணையில் பெங்களூரு அணி முதல் இடத்தில் இருந்தது. பெங்களூரு அணியை விட 8 புள்ளிகள் குறைவாக பெற்ற சென்னை அணி இறுதியில் வென்றது. பல்வேறு காரணங்களுக்காக சென்னை அணியிடம் பெங்களூரு அணி தோல்வியுற்றது.

தற்போது மீண்டும் அதே நிலை திரும்பி இருக்கிறது. இப்போதும் பெங்களூரு அணி அட்டவணையில் முதல் இடத்தில் உள்ளது. லீக் போட்டிகளில் கிடைத்த இரண்டு வெற்றிகள் பெங்களூரு அணியை விளிம்புக்கு கொண்டு வந்துள்ளது. அதுதான் அட்டவணையில் எதிரொலித்தது. கோவா அணிக்கு எதிராக மும்பையில் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் பெங்களூரு அணி கண்டிப்பாக ஜெயிக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

ISL 2019 - Will Indian players of Bengaluru dominate over overseas players of Goa?

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டிகளில் இரு தோல்விகளை மட்டுமே அவர்கள் பார்த்துள்ளனர். இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியை நாம் ஒரு போரை விட குறைவாகக் கொண்டு செல்கிறோம் என்கிறார் கோவா அணியின் பயிற்சியாளர் செர்ஜியோ லோபிரா.

கோவா அணி தற்போது எதிர்தாக்குதல் நடத்துவதில் பெருமளவு முன்னேறியுள்ளது. இந்த இரண்டு அணிகளும் நான்கு முறை மோதியுள்ளன. அதில் மூன்று முறை பெங்களூரு அணி வெற்றி பெற்றது. ஒரே ஒரு போட்டியில் மட்டும் 4-3 என்ற கோல் கணக்கில் கோவா அணி வெற்றி பெற்றது.

ISL 2019 - Will Indian players of Bengaluru dominate over overseas players of Goa?

உண்மையில், இந்த சீசனில் கோவாவின் மீது பெங்களூரு அணி இரட்டைப் போட்டியை நடத்தியது, இதையடுத்து ஐந்து கோல்களை அடித்ததுடன், இரண்டு போட்டிகளிலும் ஒரு போட்டியைக் பெங்களூரு அணி கைப்பற்றியது.

பெங்களூரு மற்றும் கோவா என இரு அணிகளும் ஸ்பானிஷ் முறையையே தங்களுடைய ஆட்டத்தில் பின்பற்றியுள்ளன. செர்ஜியோ லோபிரா மற்றும் கார்லெஸ் குவாட்ரெட் ஆகியோர் இதற்காக பார்சிலோனாவில் ஆலோசனையை கேட்டுள்ளனர்.

ISL 2019 - Will Indian players of Bengaluru dominate over overseas players of Goa?

பெங்களூரு அணியின் இந்திய வீரர்கள் தற்போது நல்ல ஃபார்மில் உள்ளனர். ஆனால் கோவா அணி வெளிநாட்டு வீரர்களை நம்பியே உள்ளது. குறிப்பாக ஃபெரான் கொராமினாஸ், அகமது மற்றும் எடு பேடியா.

பெங்களூரு அணியைப் பொறுத்தவரை இந்திய வீரர்கள் மிகுந்த நம்பிக்கையைக் கொடுக்கின்றனர். சுனில் ஷட்டரி, உதாந்தா சிங், ஹர்மன் ஜோத், ராகுல் போன்ற இந்திய வீரர்கள் இந்த சீசனில் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்து வருகின்றனர்.

ISL 2019 - Will Indian players of Bengaluru dominate over overseas players of Goa?

பெங்களூரு அணியின் குர்பீரித் சிங் ஒரு அட்டகாசமான கோல் கீப்பர். இவரும் இந்தியர்தான்.

இரண்டு முக்கிய அணிகள் இடையே நடைபெறவுள்ள இறுதிப் போட்டி வித்தியாசமாக இருக்கும் என்கிறார் கோவா அணியின் செர்ஜியோ லோபிரா.

ISL 2019 - Will Indian players of Bengaluru dominate over overseas players of Goa?

பெங்களூரு அணியைப் பொறுத்தவரை ஒரு சிறப்பான வெற்றியுடன் இந்த சீசனை முடிக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறது,

(Photos Courtesy - ISL)

Story first published: Saturday, March 16, 2019, 9:39 [IST]
Other articles published on Mar 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+