மும்பை : ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் களம் காணும் 8 அணிகளில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணி ஒன்று தான் இது வரை பெரிய வெற்றியை ருசிக்காத அணி எனலாம்.
ஐஎஸ்எல் போட்டிகளின் தொடக்கத்தில் நார்த் ஈஸ்ட் அணி பலமான வெற்றியைப் பெற்றுள்ளது. ஆனால் அந்த அணியின் முயற்சிகளும். வெற்றிகளும் அந்த அணியை கடந்த நான்கு சீசன்களிலும் அரை இறுதிப் போட்டிக்கு கூட கொண்டு செல்லவில்லை என்றே சொல்ல வேண்டும். நார்த் ஈஸ்ட் அணி பல சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது. இந்த சீசனின் தொடக்கத்தில் கூட அவர்களது விளையாட்டைப் பார்த்த ரசிகர்கள் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடும் என்று எதிர்பார்த்தனர்.

தற்போது நான்காவது இடத்தில் உள்ள எல்கோ ஷட்டரியின் வீரர்கள், பிளே ஆஃப் சுற்றுக்கான ஓட்டத்தில் உள்ளனர். தற்போது அந்த அணி 13 ஆட்டங்களில் விளையாடி இதுவரை 23 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இது அந்த அணியின் தொடக்கத்தில் மிக நன்றாக விளையாடியதால் கிடைத்தது. ஆனால் கடந்த நான்கு ஆட்டங்களில் நார்த் ஈஸ்ட் அணி ஒரு வெற்றியைக் கூட பெறவில்லை.
கடந்த ஆறு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே நார்த் ஈஸ்ட் அணி வெற்றி பெற்றுள்ளது. இது ஒன்று தான் அந்த அணியின் தற்போதைய கவலையாக உள்ளது,

நாங்கள் மிகக் கடுமையாக உழைத்தால் தான் வெற்றியை பெறமுடியும். ஒரு சில திறமைகளை வளர்த்தால் தான் நாங்கள் தொடர்ந்து விளையாட முடியும். அது அவ்வளவு எளிதான வெற்றியை நாங்கள் கொடுத்துவிட முடியாது. எனவே இனிவரும் ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் ஜெயித்தே ஆக வேண்டும் என்கிறார் நார்த் ஈஸ்ட் அணியின் பயிற்சியாளர் எல்கோ ஷட்டரி.
தற்போது அட்டவணையில் நான்காவது இடத்தில் உள்ள நார்த் ஈஸ்ட் அணி 25 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ள கோவா அணியையும் 20 புள்ளிகளுடன் உள்ள ஜாம்ஷெட்பூர் மற்றும் ஏடிகே அணிகளையும் வெல்ல வேண்டும். இந்த போட்டியில் ஒவ்வொரு புள்ளியும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
ஏடிகே மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகள் நான்காவது இடத்துக்கு கீழே உள்ளதால் பிளே ஆஃப் சுற்றுக்கு அவர்கள் முன்னேற வாய்ப்பில்லை என்று நம்புவதாக ஷட்டரி தெரிவித்துள்ளார். இந்த இரண்டு அணிகளையும் அடுத்து வரும் ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தங்கள் அணி முன்னேற முடியும் என்கிறார் எல்கோ ஷட்டரி.
டெல்லி டைனமோஸ், மும்பை சிட்டி, புனே சிட்டி மற்றும் கேரள பிளாஸ்டர்ஸ் போன்ற அணிகளை அடுத்து வரும் ஆட்டங்களில் நார்த் ஈஸ்ட் அணி சந்திக்க வேண்டியுள்ளது. மேலும் மும்பை தவிர, மற்ற பகுதிகளிலும் விளையாடுவதைக் குறைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை என்கிறார் ஷட்டரி.
நார்த் ஈஸ்ட் அணிக்கு எதிராக மற்ற பயிற்சியாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை ஷட்டரி அறிந்திருக்கவில்லை. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற அவர்களுக்கும் வாய்ப்புகள் உள்ளது. எனவே அடுத்து வரும் நான்கு ஆட்டங்கள் இதற்கு விடை அளிக்கும்.
(Photos Courtesy - ISL)