For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

ஐ.எஸ்.எல். கால்பந்து: புனேவை வீழ்த்திய கவுகாத்தி அணிக்கு புள்ளி பட்டியலில் முதலிடம்

By Veera Kumar

புனே: வட கிழக்கு ஐக்கிய அணி தொடர்ந்து ஐஎஸ்எல் கால்பந்தாட்ட தொடரில் அதிக புள்ளிகளுடன் முதலிடத்திலுள்ளது.

3வது ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி தொடரில் புனேயில் நேற்று இரவு நடந்த 11வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி)-எப்.சி.புனே சிட்டி அணிகள் மோதின.

ஆட்டம் தொடக்கம் முதலே புனே அணியின் கையே ஓங்கி இருந்தது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

இரண்டாம் பாதியில் கோல்

இரண்டாம் பாதியில் கோல்

79-வது நிமிடத்தில் கவுகாத்தி அணி கோல் அடித்தது. புனே அணி பின்கள வீரர்களுக்கு நேக்காக, போக்கு காட்டி கவுகாத்தி வீரர் ஆல்பரோ நேர்த்தியாக இந்த கோலை அடித்தார்.

வாய்ப்பு வீண்

வாய்ப்பு வீண்

புனே அணிக்கு கடைசி நேரத்தில் கிடைத்த 'பிரிகிக்' வாய்ப்பையும் அந்த அணியால் கோலாக்க முடியவில்லை. முடிவில் கவுகாத்தி அணி 1-0 என்ற கோல் கணக்கில் புனேயை வீழ்த்தி 3வது வெற்றியை பதிவு செய்ததுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. 3வது ஆட்டத்தில் ஆடிய புனே அணி சந்தித்த 2வது தோல்வி இதுவாகும்.

சிவப்பு அட்டை

சிவப்பு அட்டை

36வது நிமிடத்தில் புனே அணி வீரர் அனிபால் மீது மோதிய கவுகாத்தி அணி வீரர் நிர்மல் சேத்ரி நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் கவுகாத்தி அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டியதானது. இந்த வாய்ப்பை புனே அணி சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை.

மஞ்சள் கார்டு

மஞ்சள் கார்டு

அதேநேரம், 71வது நிமிடத்தில் புனே அணி வீரர் எட்வர்டோ முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டதால் இரண்டாவது முறையாக மஞ்சள் அட்டை பெற்று வெளியேறினார். அதன் பிறகு புனே அணியும் 10 வீரர்களுடன் விளையாடியது.

Story first published: Thursday, October 13, 2016, 11:34 [IST]
Other articles published on Oct 13, 2016
English summary
NorthEast United FC ascended to the top of the ISL table after they took home maximum points against FC Pune City in a battle which could have gone either way here at the Shiv Chhatrapati sports complex on Wednesday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X