Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

களை கட்டும் ஐ.எஸ்.எல்.. டெல்லி டைனமோஸ் அணிக்காக களமிறங்குகிறார் ஸ்பெயின் வீரர் மார்கோஸ்

டெல்லி: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் டெல்லி டைனமோஸ் எப்சி அணிக்காக ஸ்பெயின் நாட்டு வீரர் மார்கோஸ் டெபர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஸ்பெயின் வீரரான மார்கோஸ் டெபர் முன்னதாக ஸ்பெயின் நாட்டின் யூ,இ எலாகோஸ்டரா அணிக்காக விளையாடியுள்ளார். இந்நிலையில், ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் பங்கேற்கும் டெல்லி டைனமோஸ் எப்சி அணி மார்கோஸ் டெபரை தங்கள் அணிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

ISL: Delhi Dynamos sign Spanish midfielder Marcos Tebar

இது குறித்து மார்கோஸ் டெபர் தெரிவித்துள்ளதாவது: டெல்லி டைனமோஸ் அணிக்காக விளையாட நான் தேர்ந்தெடுப்பட்டது எனது வாழ்க்கையின் புதிய நிலை போன்றது. டெல்லி டைனமோஸ் அணிக்காக விளையாட மிகவும் ஆர்வமாக உள்ளது. இந்த தொடரில் டெல்லி டைனமோஸ் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதே எனது ஆசை. டெல்லி டைனமோஸ் எப்சி அணியின் பயிற்சியாளர் ஜாம்ரட்டோ அதிக அனுபவம் வாய்ந்தவர். அவருடன் இணைந்து இந்த தொடரில் பங்கேற்பது சிறப்பானது என்று கூறினார்.

இதனிடையே, மார்கோஸ் டெபர் ஒரு சிறந்த வீரர். ஐரோப்பாவில் உள்ள பலம் வாய்ந்த அணிகளுடன் அவர் விளையாடிய அனுவம் பெற்றுள்ளார். அவரின் இந்த அனுபவம் டெல்லி டைனோமோஸ் எப்சிக்கு நிச்சம் பயனளிக்கும் விதமாக அமையும் என்று கூறினார்.

Story first published: Thursday, September 1, 2016, 16:44 [IST]
Other articles published on Sep 1, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+