For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐபிஎல்னா சென்னை சூப்பர் கிங்ஸ்… ஐஎஸ்எல்னா டோணியின் சூப்பர் மச்சான்ஸ்!

By Srividhya Govindarajan

பெங்களூரு: ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் இன்று இரவு நடக்கும் பைனல்ஸில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்சி அணியும், மிகப் பெரிய கால்பந்து கிளப்பாக மாறிவரும் பெங்களுரு எப்சி அணியும் மோதுகின்றன.

ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி, நான்காவது சீசன் நடந்து வருகிறது. இதில் சென்னையின் எப்சி அணியும் பெங்களூரு எப்சி அணியும் பைனல்ஸில் மோத உள்ளன.

இரண்டுமே மிகவும் வலுவான அணிகள். கோப்பையை வெல்வதற்கு ஒவ்வொரு அணிக்கும் பல்வேறு சாதகமான அம்சங்கள் கூறி கொண்டே செல்லலாம்.

ஐஎஸ்எல்லில் முதல் முறை

ஐஎஸ்எல்லில் முதல் முறை

பெங்களூரு எப்சி அணி 2013ல் உருவாக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளில் நான்கு கோப்பைகளை வென்றுள்ளது. இரண்டு முறை, ஐ-லீக் கால்பந்து சாம்பியன் மற்றும் இரண்டு பெடரேஷன் கோப்பைகளை வென்றுள்ளது. தனது ஐந்தாவது ஆண்டில், ஐஎஸ்எல் போட்டியில் களமிறங்கியுள்ளது. இதையும் வெல்ல வேண்டும் என்ற லட்சிய வெறியுடன் உள்ளது.

அசத்தினார் சேத்ரி

அசத்தினார் சேத்ரி

இந்திய அணி கேப்டன் சுனில் சேத்ரி போன்ற வீரர்கள் அணியில் உள்ளனர். அரை இறுதியில் ஹாட்ரிக் கோலடித்து அசத்தினார் சேத்ரி. சொந்த மண்ணில் விளையாடுவது மிகப் பெரிய சாதகம் என்று பெங்களூரு எப்சி கோப்பையை வெல்லும் என்பதற்கு காரணங்களை கூறுகின்றனர்.

இது டோணியின் அணி

இது டோணியின் அணி

ஆனால், சென்னையின் எப்சிக்கு ஒரே ஒரு காரணத்தை மட்டுமே ரசிகர்கள் கூறுகின்றனர். `ஐபிஎல்னா சென்னை சூப்பர் கிங்ஸ், ஐஎஸ்எல்னா கேப்டன் கூல் மகேந்திர சிங் டோணியின் சென்னையின் எப்சி‘. இதுவரை நடந்துள்ள ஐஎஸ்எல் தொடர்களுடன் ஒப்பிடுகையில், சென்னையின் எப்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதுவரை நடந்துள்ள சீசன்களில், புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த அணிகள் கோப்பையை வென்றது கிடையாது. இந்த முறை பெங்களூரு எப்சி முதலிடத்தில் உள்ளது.

இந்த காரணங்களை பாருங்க

இந்த காரணங்களை பாருங்க

அதேபோல் பைனல்ஸ் போட்டி நடக்கும் சிட்டி அணி இதுவரை கோப்பையை வென்றது கிடையாது. எப்சி கோவா மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகளே இதற்கு சாட்சி. மற்றொரு காரணம். இந்த சீசனில், இரு அணிகளும் இருமுறை மோதின. அதில் பெங்களூரில் நடந்த போட்டியில் சென்னையின் எப்சி வென்றது. அதனால் பெங்களூரு மைதானம் சென்னையின் எப்சிக்கு ராசியானது என்கிறார்கள்.

வெற்றிக்கு புது காரணம்

வெற்றிக்கு புது காரணம்

இதுவரை நடந்துள்ள மூன்று சீசன்களில் முதல் சீசனில் ஏடிகே, இரண்டாவது சீசனில் சென்னையின் எப்சி, மூன்றாவது சீசனில் மீண்டும் ஏடிகே வென்றது. அப்படி பார்த்தால், இந்த முறை, சென்னையின் எப்சி தான் சாம்பியனாகும் என்று புது காரணத்தையும் கூறுகிறார்கள். இதெல்லாம் ஒருபுறம் இருக்க, மிகவும் வலுவான தடுப்பாட்டம், அணியின் உரிமையாளரைப் போலவே பதற்றமடைமடையாமால் கூலாக இருப்பது ஆகியவை சென்னையின் எப்சிக்கு பலமாகும். மிகச் சிறந்த பினிஷரான டோணியின் சென்னையின் எப்சி அணி, இந்த சீசனை சிறப்பாக பினிஷிங் செய்யும் என்று நிச்சயமாக நம்பலாம்.

Story first published: Saturday, March 17, 2018, 18:46 [IST]
Other articles published on Mar 17, 2018
English summary
Chennaiyin FC – Bengaluru FC to clash in ISL finals
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+