Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2022 கால்பந்து தொடர் - புத்தம் புது அணியுடன் களமிறங்கும் சென்னை.. முக்கிய வீரர்கள் யார்?

சென்னை : ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 9வது சீசன் நேற்று தொடங்கியது. வரும் மார்ச் மாதம் வரை நடைபெறும் இந்த தொடரில் 11 அணிகள் பங்கேற்கிறது.

முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு 4 அணிகளுக்கு பதிலாக 6 அணிகள் தகுதி பெற உள்ளது. பிளேயிங் ஆப் சுற்றில் முதல் 2 இடங்கள் பிடிக்கும் அணி நேரடியாக தகுதி பெறும்.

எலிமினேட்டர் சுற்றில் 3வது இடம் பிடித்துள்ள அணி 6வது இடம் பிடித்த அணியுடனும், 4வது இடம் பிடித்த அணி, 5வது இடம் பிடித்த அணியுடன் மோதும். இதில் தோற்கும் அணி வெளியேறிவிடும்.

புதிய அணி

புதிய அணி

வெற்றி பெறும் அணி, அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். சென்னை அணியை பொறுத்தவரை புதிய வீரர்கள், புதிய பயிற்சியாளர்களுடன் களமிறங்குகிறது. 2 முறை சாம்பியனான சென்னை கால்பந்து அணி, கடந்த 5 ஆண்டுகளாக சாம்பியன் பட்டம் வெல்லவில்லை. கடைசியாக 5 சீசனில் வெறும் 2 முறை தான் பிளே ஆப் சுற்றுக்கு சென்னை தகுதி பெற்று இருக்கிறது.

புதிய வீரர்கள்

புதிய வீரர்கள்

இதனால் இழந்த பெருமையை மீட்கும் முயற்சியில் சென்னை கால்பந்து அணி களமிறங்குகிறது. ஜெர்மனியை சேர்ந்த பயிற்சியாளர் தாமஸ் பிராடாரிச், சென்னை அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதே போன்று மற்ற அணிகளில் விளையாடிய நாராயன் தாஸ், முகமது சாஜித் ஆகியோரை ஒப்பந்தம் செய்து சென்னை அணியின் தடுப்பாட்டத்தை பலப்படுத்தியுள்ளார் பயிற்சியாளர் பிராடாரிச்.

நட்சத்திர வீரர்கள்

நட்சத்திர வீரர்கள்

சென்னை அணியின் இதய துடிப்பாக அனிருத் தப்பா இருக்கிறார். இவரை சுற்றியே சென்னை அணியின் ஆட்டம் இருக்கும்.இதே போன்று ஐரோப்பிய கால்பந்து லீக் தொடரில் விளையாடிய அனுபவம் உள்ள டியாகினி சென்னை அணிக்கு பெரும் பலமாக இருக்கும் என கருதப்படுகிறது. சென்னை அணி 18 புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் புதிய அணியில் அனைவரும் பழக கொஞ்சம் நேரம் எடுக்கலாம்.

சென்னை அணி அட்டவணை

சென்னை அணி அட்டவணை

சென்னை அணி அக்டோபர் மாதத்தில் வெறும் 3 போட்டியில் தான் விளையாடுகிறது.

அக்டோபர் 10 - சென்னை Vs எடிகே (கொல்கத்தா)

அக்டோபர் 14 -சென்னை Vs பெங்களூரு (சென்னை)

அக்டோபர் 21- சென்னை Vs கோவா (சென்னை)

Story first published: Saturday, October 8, 2022, 13:04 [IST]
Other articles published on Oct 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+