Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐ.எஸ்.எல். கால்பந்து: முக்கிய வீரர் காயமடைந்தாலும் அசரால் ஆடி, கேரளாவை வீழ்த்தியது கொல்கத்தா!

கொச்சி: ஐஎஸ்எல் கால்பந்து போட்டித் தொடரில், நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில், அத்லெடிகோ டி கொல்கத்தா அணி, கேரளா பிளேஸ்டர்ஸ் எப்சி அணியை வீழ்த்தியது.

கொச்சி, நேரு ஸ்டேடியத்தில்நடந்த இப்போட்டியில், இரு அணி வீரர்களும் தற்காப்பு ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தியதால் முதல் பாதி ஆட்டத்தில் கோல் ஏதும் விழவில்லை.

ISL: Victorious Atletico de Kolkata return amidst anxiety with Helder Postiga injury

இரண்டாவது பாதியில் ஆவேசமாக விளையாடியது கொல்கத்தா அணி. ஆட்டத்தின், 53வது நிமிடத்தில் ஜேவியர் கிராண்டி அபாரமாக கோல் அடிக்க 1-0 என முன்னிலை பெற்றது கொல்கத்தா.

ஆட்ட நேர இறுதிவரை, மேற்கொண்டு கோல் ஏதும் விழாததால், அத்லெடிகோ டி கொல்கத்தா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. கொல்கத்தாவின் முக்கிய வீரரான, ஹெல்டர் போஸ்டிகா ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் காயமடைந்து மைதானத்தை விட்டு வெளியேறியது, அந்த அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவுக்கு எதிரான வெற்றியின் மூலம் கிடைத்த 3 புள்ளிகளை கூட பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், சோகமே உருவான முகத்துடன், கொல்கத்தா அணியின் மைதானத்தை விட்டு வெளியேற இதுவே காரணமாக அமைந்தது.

Story first published: Thursday, October 6, 2016, 18:16 [IST]
Other articles published on Oct 6, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+