பாலிவுட் "ஃபுட்பால்": பார்வையாளர்களின் கண்களைக் கவர்ந்த நடிகர் ஆமீரின் 'குட்டி' மகன்
மும்பை: நடிகர் ஆமீர் கானின் மகள் இரா கான் ஏற்பாடு செய்த கால்பந்தாட்ட போட்டியில் பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், ரித்திக் ரோஷன், அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நடிகர் ஆமீர் கானின் மகள் இரா கான் விலங்குகள் நல அமைப்புக்காக நன்கொடை வழங்க அனைவரும் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி கால்பந்தாட்ட போட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த போட்டியில் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டு விளையாடினர்.

ஆமீர் அணி
ஒரு அணியில் ஆமீர் கான், தினோ மோரியா, குணால் கபூர் உள்ளிட்ட நடிகர்கள் விளையாடினர்.

ரித்திக் ரோஷன்
நடிகர்கள் ரித்திக் ரோஷன், அபிஷேக் பச்சன், ஆமீரின் மனைவி கிரண் ராவ் உள்ளிட்டோர் எதிர் அணியாக இருந்தனர்.

சல்மான்
ஆமீரின் நல்ல நண்பரான சல்மான் கான் தனது கிக் பட நாயகி ஜாக்குலின் பெர்ணான்டஸுடன் வந்திருந்தார்.

வெற்றி
போட்டியில் ஆமீர் கானின் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

ஆசாத்
ஆமீர் கான், கிரண் ராவின் மகன் ஆசாத் கானும் மைதானத்தில் வந்து தன் பங்குக்கு பந்தை எத்தினார்.

அனைத்து கண்களும்
குட்டி ஆசாத் தனது சின்னஞ்சிறு கால்களால் பந்தை எத்தி விளையாடியது தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

கியூட்
வாடகைத் தாய் மூலம் பிறந்த ஆசாத் ஆமீர் கானின் மூன்றாவது குழந்தை ஆகும். அவருக்கு முதல் மனைவி மூலம் ஜுனைத் என்ற மகனும், இரா என்ற மகளும் உள்ளனர்.

இரா
இளம் வயதில் விலங்குகளின் நலனுக்காக கால்பந்தாட்ட போட்டிக்கு ஏற்பாடு செய்த இரா கான் இவர் தான்.


Click it and Unblock the Notifications