For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிபா உலகக் கோப்பை... அணிகள் அலசல் - மலையை முடியால் இழுக்குமா ஸ்வீடன்!

பிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. இதில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி குறித்த விரிவான அலசல்.

சென்னை:21வது பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நடக்கின்றன. ஜூன் 14ல் துவங்கி, ஜூலை 15 வரை நடக்கும் இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.

2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடந்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

It will be tough encounter for sweden in the fifa world cup

ஜெர்மனி அல்லது பிரேசில் இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்படுகின்றன. அதே நேரத்தில் அர்ஜென்டீனா, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் பலம், பலவீனம் குறித்து மைகேல் தமிழ் விரிவாக அலசுகிறது.

நாடு : ஸ்வீடன்
எப் பிரிவில் ஜெர்மனி, மெக்சிகோ, தென்கொரியா உடன் இடம்பெற்றுள்ளது.

லீக் சுற்று ஆட்டங்கள் :
ஜூன் 18ல் தென்கொரியா
ஜூன் 23ல் ஜெர்மனி
ஜூன் 27ல் மெக்சிகோ

பிபா தரவரிசை : 23

கடந்த உலகக் கோப்பையில் : தகுதி பெறவில்லை

உலகக் கோப்பையில் சிறந்த இடம் : 1958ல் பைனல், இரண்டாம் இடம் பிடித்தது

முக்கிய வீரர்கள் : எமில் போர்ஸ்பெர்க், விக்டர் லின்டலோப், மார்கஸ் பெர்க்

கோச் : ஜேன் ஆன்டர்சன்

2006ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பையில் விளையாட ஸ்வீடன் தகுதி பெற்றுள்ளது. ஐரோப்பிய அளவிலான தகுதிச் சுற்றில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

கடந்த 2016ல் ஸ்வீடன் மிகவும் மோசமான நிலையில் இருந்தபோது கோச்சாக ஆன்டர்சன் பொறுப்பேற்றார். தகுதிச் சுற்று ஆட்டத்தில் முன்னாள் உலகக் கோப்பை சாம்பியன் இத்தாலியை வெல்வதற்கு அவர் வகுத்த திட்டமே முக்கியமான காரணமாகும்.

ஸ்வீடனின் மிகவும் முக்கியமான முன்கள வீரரான ஜிலாடன் இப்ராஹிமோவிக், 2016ல் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். உலகக் கோப்பைக்கு அவர் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்ராஹிமோவிக் இல்லாமலேயே பல போட்டிகளில் வென்றதால், அவரை அணிக்கு பரிசீலிக்கவில்லை. அவர் இல்லாத குறையை ஆந்தரியாஸ் கிரான்குவிஸ்ட் மறக்கடித்து வருகிறார்.

தற்போது ஸ்வீடன் அணி மிகவும் ஒற்றுமையாக, மீண்டும் கிடைத்த வாய்ப்பை தவறவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். ஆனால், அணியின் முக்கியமான வீரர்கள் பலர் முழுமையான பார்மில் இல்லை. கடைசியாக நடந்த சில ஆட்டங்களிலும், பயிற்சி ஆட்டங்களிலும் ஸ்வீடன் திணறி வருகிறது.

நடப்பு சாம்பியன் ஜெர்மனி, மெக்சிகோ போன்ற அணிகளை வெல்வது என்பது, முடியால் மலையை இழுப்பதற்கு சமமாகும். கோப்பையை வெல்லும் அணியாக ஜெர்மனி கருதப்படுகிறது. மெக்சிகோவை பொருத்தவரை, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறுவது அவர்களுக்கு பழக்கமான ஒன்றாக அமைந்துள்ளது. அதனால், முதல் சுற்றை தாண்டுவதே ஸ்வீடனுக்கு மிகவும் கடுமையான சவாலாகவே இருக்கும்.

Story first published: Tuesday, June 5, 2018, 15:24 [IST]
Other articles published on Jun 5, 2018
English summary
It is uphill task for sweden in the fifa world cup.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+