Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

FIFA உலககோப்பை 2026: தொடர்ந்து 3வது முறையாக தகுதி பெற தவறியது இத்தாலி.. வீரர்கள் கண்ணீர்

இத்தாலி: நான்கு முறை உலகச் சாம்பியனான இத்தாலி அணி 2026 ஃபிஃபா உலகக் கோப்பைக்கு தகுதி பெற முடியாமல் தொடர்ந்து 3வது முறையாக வெளியேறியது. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் நடைபெறவுள்ள இத்தொடரில் இத்தாலி பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. செனிகாவில் உள்ள ஸ்டேடியன் பிலினோ போல்ஜே மைதானத்தில், போஸ்னியா அண்ட் ஹெர்செகோவினாவுடன் பிளேஆஃப் இறுதிப் போட்டியில் 1-1 என சமன் செய்தது. பின்னர், பெனால்டி ஷூட்-அவுட்டில் 4-1 என்ற கோல் கணக்கில் இத்தாலி தோல்வியைத் தழுவியது.

இது இத்தாலிக்கு தொடர்ச்சியாக மூன்றாவது உலகக் கோப்பையில் ஏற்பட்ட பெரும் பின்னடைவு. முன்னதாக 2018 மற்றும் 2022 உலகக் கோப்பைகளிலும் இத்தாலி வெளியேறியிருந்தது. 1934, 1938, 1982 மற்றும் 2006 என நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி, தற்போது தொடர்ச்சியாக மூன்று உலகக் கோப்பைகளை தவறவிட்ட முதல் முன்னாள் சாம்பியன் என்ற மோசமான வரலாற்றைப் பதித்துள்ளது.

2026 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில், ஜெனாரோ கட்டூசோ தலைமையிலான இத்தாலி அணி ஒரு கடினமான குரூப் I-ல் விளையாடியது. ஆறு வெற்றி, இரண்டு தோல்விகளுடன் 18 புள்ளிகள் பெற்று இத்தாலி நார்வேக்கு பின் இரண்டாவது இடம்பிடித்தது. இதனால் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடிந்தது, அதே சமயம் குரூப் ஐ-ல் முதலிடம் பிடித்த நார்வே நேரடித் தகுதி பெற்றது.

செனிகாவில் நடந்த பிளேஆஃப் இறுதிப் போட்டி மிகவும சவாலாக இருந்தது. இத்தாலி பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்து, பல கோல் வாய்ப்புகளை உருவாக்கியது. ஆனாலும், 120 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்திற்குப் பிறகு 1-1 என சமன் செய்ய மட்டுமே முடிந்தது. பெனால்டி ஷூட்-அவுட்டில், போஸ்னியா அண்ட் ஹெர்செகோவினா ஐந்தில் நான்கை கோலாக்க, இத்தாலியால் ஒரு கோலை மட்டுமே அடிக்க முடிந்தது.

இத்தாலி கடைசி உலகக் கோப்பையில் விளையாடியது, 2014-ல் தான், அது லீக் சுற்றில் முடிந்தது. 2018 உலகக் கோப்பைக்கு, பிளேஆஃபில் ஸ்வீடனிடம் தோல்வியைச் சந்தித்தது (முதல் லெக்கில் 1-0 என Away தோற்று, பின் 0-0 Home சமன்). 1958-ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே அவர்களுக்கு முதல் உலகக் கோப்பையை தவறவிட்டதாகும். 2022 உலகக் கோப்பைக்கு பிளேஆஃப் அரையிறுதியில் வடக்கு மாசிடோனியாவிடம் தோற்று, இரண்டாவது தொடர் வெளியேற்றத்தை சந்தித்தது.

மற்ற ஐரோப்பிய பிளேஆஃப் இறுதிப் போட்டிகளில், செக்கியா, டென்மார்க்கை பெனால்டி ஷூட்-அவுட்டில் வீழ்த்தி உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்றது. துர்கியே அணி கொசோவோவுக்கு எதிராக 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அதேபோல, ஸ்வீடன் அணி போலந்தை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி உலகக் கோப்பைக்கு முன்னேறியது.

Story first published: Wednesday, April 1, 2026, 9:41 [IST]
Other articles published on Apr 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+