
35வது போட்டி டிரா
ஐஎஸ்எல் 2020 -21 சீசனின் 35வது போட்டி கோவாவின் ஜிஎம்சி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்சி மற்றும் எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதிய நிலையில், இரு அணி வீரர்களும் தலா ஒரு கோல் போட்டு போட்டியை சமன் செய்துள்ளனர்.

இறுதியில் உள்ள அணிகள்
ஐஎஸ்எல்லின் இந்த 7வது சீசனில் 9 மற்றும் 10வது இடங்களில் இரு அணிகளும் உள்ள நிலையில் இதுவரை ஒரு வெற்றியையும் இரு அணிகளும் பெறவில்லை. இதையடுத்து நேற்றைய இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றிக்காக தீவிரம் காட்டின. ஆயினும் இரு அணிகளின் பல்வேறு முயற்சிகளும் பலிக்கவில்லை.

கேரளா அணியின் முயற்சி வீண்
போட்டியின் 9வது நிமிடத்திலேயே ஈஸ்ட் பெங்கால் அணி கோல் அடிக்கும் முயற்சியை மேற்கொண்டது. அடுத்த இரண்டு நிமிடங்களில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் முயற்சியும் தவிடு பொடியானது. போட்டியின் 70வது நிமிடத்தில் கேரளா முந்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும் அந்த முயற்சியை எதிரணி கீப்பர் பொய்யாக்கினார்.

ஜீக்சன் சிங் அபாரம்
தொடர்ந்து ஈஸ்ட் பெங்கால் அணி கோல் அடித்து முந்திய நிலையில், இறுதி நேரத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் ஜீக்சன் சிங் ஒரு கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். இதையடுத்து இந்தப் போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணியின் வெற்றிக்கனவு தகர்ந்தது.


Click it and Unblock the Notifications













