ஃபிஃபா உலகக்கோப்பை இறுதிப்போட்டி.. 32 மில்லியன் பார்வையாளர்கள்.. தட்டித்தூக்கிய ஜியோ!
மும்பை: ஃபிஃபா உலகக்கோப்பை இறுதிப்போட்டியை பார்த்த ரசிகர்களின் விவரத்தை ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் கடந்த மாதம் 20ம் தேதி தொடங்கியது. மொத்தமாக 28 நாட்கள் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் 32 அணிகள் பங்கேற்று 64 போட்டிகளில் விளையாடின.
முதலில் குரூப் சுற்று போட்டிகள், பின்னர் நாக் அவுட், தொடர்ந்து காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் நடைபெற்றன. இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை வென்றது.

ஃபிஃபா உலகக்கோப்பை
ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரை இந்தியாவில் ஒளிபரப்புவதற்கான உரிமையை ஜியோ நிறுவனம் கைப்பற்றி இருந்தது. இதனால் ஜியோ சினிமா செயலியில் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரை இலவசமாக பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைத்தது. ஆனால் தொடக்க நாளில் லட்சக்கணக்கான ரசிகர்கள் ஜியோ சினிமா செயலியை பயன்படுத்தியதால் ஏராளமான பிரச்சினைகள் எழுந்தன.

ஜியோ நிறுவனம்
இதனால் சமூக வலைதளங்களில் ஜியோ சினிமா செயலியை ரசிகர்கள் கிண்டல் செய்ய தொடங்கினர். ஆனால் இரண்டாம் நாள் முதல் ஜியோ சினிமா செயலியில் உலகக்கோப்பை போட்டிகளை நல்ல தரத்துடன் பார்க்க முடிந்தது. பிராந்திய மொழிகளில் வர்ணனை, அதற்கேற்ற நிர்வாகிகள், ஒளிபரப்பின் தரம் அனைத்தும் அசத்தலாக இருந்தது.

32 மில்லியன்
இந்த நிலையில் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியை பார்த்தவர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இந்த விவரம் பற்றி ஜியோ சினிமா தரப்பில் கூறுகையில், ஜியோ சினிமா செயலி மற்றும் ஜியோ சினிமா தளம் மூலமாக 32 மில்லியன் பேர் இறுதிப்போட்டியை பார்த்திருக்கிறார்கள். அதேபோல் ஜியோ நிறுவனத்தின் டிஜிட்டல் தளம் மூலம் 110 மில்லியன் பார்வையாளர்கள் இறுதிப்போட்டியை கண்டுள்ளனர்.

40 மில்லியன் நிமிடங்கள்
அதேபோல் ஜியோ சினிமா செயலி மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 சேனல் மூலமாக 40 பில்லியன் நிமிடங்கள் பார்வையாளர்கள் செயலியில் பார்த்துள்ளனர். இதுகுறித்து வியாகாம் 18 ஸ்போர்ட்ஸ் சிஈஓ அனில் ஜெயராஜ் கூறுகையில், ஃபிஃபா உலகக்கோப்பை தொடர் தொடங்கிய நாள் முதல் இந்தியாவில் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகளில் ஜியோ சினிமா தான் முதலிடம். அதேபோல் இந்தியா பங்கேற்காத விளையாட்டு தொடரை அதிக பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications