ஃபீஃபா தீம் சாங்கா பாடினீங்க: ஜெனிபர் லோபஸ், பிட்புல்லை ட்விட்டரில் திட்டி தீர்க்கும் ரசிகர்கள்
சென்னை: ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டியின் துவக்க நிகழ்ச்சியில் பாடிய அமெரிக்க நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபஸ் மற்றும் அமெரிக்க ராப்பரான பிட்புல்லை ரசிகர்கள் ட்விட்டரில் திட்டிக் கொண்டிருக்கின்றனர்.
ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டியின் துவக்க விழாவில் அமெரிக்க பாடகியும், நடிகையுமான ஜெனிபர் லோபஸ், அமெரிக்க ராப்பரான பிட்புல், பிரேசிலைச் சேர்ந்த பாடகி கிளாடியா லீயட் ஆகியோர் தீம் பாடலான வீ ஆர் ஒன்(ஓலா ஓலா) பாடலை பாடினர்.
இந்நிலையில் இந்த பாடல் குறித்து ரசிகர்கள் ட்விட்டரில் லோபஸ் மற்றும் பிட்புல்லை திட்டி தீர்க்கின்றனர். அப்படி ரசிகர்கள் போட்ட சில ட்வீட்களை பார்ப்போம்.

ஷகீரா
ஷகீராவை மறுபடியும் அழைத்து வாருங்கள். (கடந்த 2010ம் ஆண்டு கால்பந்தாட்ட போட்டி துவக்க விழாவில் அமெரிக்க பாடகியான ஷகீரா தான் தீம் பாடலை பாடினார்)

மோசம்
இது போன்ற ஒரு மோசமான துவக்க விழா பாடல் நிகழ்ச்சியை நான் பார்த்ததே கிடையாது.

பணம்
இது தான் துவக்க விழாவா? டிக்கெட்டுக்கான எனது பணத்தை நான் எங்கே திரும்பப் பெறலாம்.

லா லா லா
உலகக் கோப்பை போட்டிகள் துவங்கியும் ஷகீராவின் லா லா லா வீடியோவை தான் ஏராளமானோர் இன்று பார்த்துள்ளனர். பிட்புல், லோபஸ் ஷகீராவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

லோபஸ்
லோபஸ் பாடுவதை நிறுத்திவிடுவது நல்லது. ரொம்ப மோசசசசசசம்.

தீம் சாங்
இது ஷகீராவின் இடம். தீம் பாடலுக்கு ஜெனிபர் லோபஸ் சரியில்லை.


Click it and Unblock the Notifications