For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

ஐஎஸ்எல் கால்பந்து: பலம் வாய்ந்த மும்பை அணியை வீழ்த்தி கேரளா முதல் வெற்றி

By Veera Kumar

கொச்சி: தொடர் தோல்விகளால் அவதிப்பட்டு வந்த சச்சின் டெண்டுல்கரின் கேரளா அணி, பலம் வாய்ந்த மும்பை அணியை 1-0 என வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது.

3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி., அட்லெடிகோ டீ கொல்கத்தா, நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி), கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி., எப்.சி.புனே சிட்டி, மும்பை சிட்டி எப்.சி., எப்.சி.கோவா, டெல்லி டைனமோஸ் எப்.சி. ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

Kerala Blasters FC clash with Mumbai City FC defence

இந்த போட்டி தொடரில் நேற்று கேரள மாநிலம் கொச்சியில் நடந்த லீக் போட்டியில் கேரளா அணி, கோவா அணியை எதிர்கொண்டது. முதல் பாதியில் இவ்விரு அணிகளும் கோல் போடாமல் சமநிலை வகித்தன. இரண்டாவது பாதியில் சுதாரித்துக்கொண்ட கேரளா அணிக்கு 58 நிமிடத்தில் மைக்கேல் சோப்ரா முதல் கோல் அடித்தார். கடைசி நிமிடம் வரை போராடிய கோவா அணி கோல் அடிக்க முடியவில்லை. ஆட்ட நேர முடிவில் கேரளா 1 -0 என்ற புள்ளி கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

Story first published: Saturday, October 15, 2016, 1:14 [IST]
Other articles published on Oct 15, 2016
English summary
Mumbai City FC look to continue their tremendous form against winless Kerala Blasters at the Jawaharlal Nehru Stadium in Kochi on Friday. Mumbai have two wins and a draw from their first three matches of ISL 2016 whereas Kerala have suffered two defeats and salvaged a draw.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X