Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

16 அணிகள் அவுட்... நாளை முதல் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள்.... யார் யாருடன் விளையாடுகின்றனர்!

Recommended Video

நாக் அவுட்டில் 10 அணிகள்...கோப்பையை வெல்ல போவது யார்?- வீடியோ

மாஸ்கோ: 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் நாக் சுற்று ஆட்டங்கள் நாளை துவங்குகின்றன. முதல் நாளில் பிரான்ஸ் - அர்ஜென்டினா, உருகுவே - போர்ச்சுகல் சந்திக்கின்றன.

21-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடந்து வருகின்றன. இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. இவை தலா 4 நாடுகள் என, 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த மாதம் 14ம் தேதி துவங்கிய பிரிவு சுற்று லீக் ஆட்டங்கள் நேற்று இரவோடு முடிந்தன.

knock out matches to start from tomorrow in the fifa world cup

ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகள், நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. பெரிதும் எதிர்பார்த்த அணிகள், சில அதிர்ச்சிகளை சந்தித்தாலும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. நடப்பு சாம்பியன் ஜெர்மனி முதல் சுற்றுடன் வெளியேறியது. முன்னாள் சாம்பியன்களான ஸ்பெயின், பிரான்ஸ், அர்ஜென்டினா, பிரேசில், உருகுவே, இங்கிலாந்து ஆகிய 6 அணிகளும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. மற்றொரு முன்னாள் சாம்பியனான இத்தாலி, இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெறவில்லை.

knock out matches to start from tomorrow in the fifa world cup

நாக் அவுட் சுற்று ஆட்டங்கள், நாளை துவங்கி, ஜூலை 3ம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் இந்திய நேரப்படி இரவு 7.30, இரவு 11.30 மணி என இரண்டு ஆட்டங்கள் நடைபெறும். இதில் வெற்றி பெறும் அணிகள், காலிறுதிக்கு முன்னேறும்.

நாக் அவுட் சுற்று ஆட்டங்களுக்கான முழு அட்டவணை:

ஆட்டம் எண் 49. ஜூன் 30 - இரவு 7.30 - கசான் : பிரான்ஸ் - அர்ஜென்டினா
ஆட்டம் எண் 50. ஜூன் 30 - இரவு 11.30 - சோச்சி : உருகுவே - போர்ச்சுகல்
ஆட்டம் எண் 51. ஜூலை 1 - இரவு 7.30 - மாஸ்கோ : ஸ்பெயின் -ரஷ்யா
ஆட்டம் எண் 52. ஜூலை 1 - இரவு 11.30 - நிஷ்னி நோவ்கோராட் : டென்மார்க் - குரேஷியா
ஆட்டம் எண் 53. ஜூலை 2 - இரவு 7.30 - சமாரா : மெக்சிகோ - பிரேசில்
ஆட்டம் எண் 54. ஜூலை 2 - இரவு 11.30 - ரோஸ்டோவ் ஆன் டான் : ஜப்பான் - பெல்ஜியம்
ஆட்டம் எண் 55. ஜூலை 3 - இரவு 7.30 - செயின்ட் பீட்டர்ஸ்பர்க் : ஸ்வீடன் - சுவிட்சர்லாந்து
ஆட்டம் எண் 56. ஜூலை 3 - இரவு 11.30 - மாஸ்கோ : கொலம்பியா - இங்கிலாந்து

Story first published: Friday, June 29, 2018, 19:03 [IST]
Other articles published on Jun 29, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+