Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கண்ணீருடன் நின்ற ரொனால்டோ.. கட்டிப்பிடித்த யமால்.. உலகக்கோப்பையில் நெகிழ்ச்சி சம்பவம்

டல்லாஸ்: ஸ்பெயினுக்கு எதிரான போட்டியில் போர்ச்சுகல் அணி அதிர்ச்சி தோல்வி அடைந்து உலகக்கோப்பையிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார். அவரை ஸ்பெயினின் 18 வயது இளம் வீரர் லாமின் யமால் கட்டிப்பிடித்து தேற்றிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

டல்லாஸில் நடைபெற்ற ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் ஸ்பெயினிடம் 1-0 என போர்ச்சுகல் தோற்றது. தனது கடைசி உலகக்கோப்பை போட்டி இதுதான் என ஏற்கனவே அறிவித்திருந்தார் ரொனால்டோ. இந்த நிலையில், போர்ச்சுகல் அணி தோற்று வெளியேறியதால் போட்டி முடிந்ததும் கட்டுப்பாட்டை இழந்து தேம்பித் தேம்பி அழுதார் ரொனால்டோ.

Lamine Yamal Comforts Crying Cristiano Ronaldo after Portugal exit FIFA World Cup 2026

சக வீரர்கள் அவருக்கு ஆறுதல் கூறியபோது, ஸ்பெயின் அணியின் 18 வயது இளம் வீரர் லாமின் யமால், ரொனால்டோவிடம் சென்று அவரை இறுக்கமாகக் கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார். இந்த நெகிழ்ச்சியான தருணம் சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை வென்றுள்ளது. சர்வதேச அளவில் அதிக கோல்கள் (146) மற்றும் அதிக போட்டிகளில் (233) விளையாடிய சாதனையாளரான ரொனால்டோவின் உலகக்கோப்பை பயணம் இத்துடன் முடிவுக்கு வந்துள்ளது.

ஸ்பெயின் சாதனை

இப்போட்டியில் வெற்றி பெற்ற ஸ்பெயின் அணி, உலகக்கோப்பை வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. உலகக்கோப்பையில் தொடர்ந்து 6 போட்டிகளில் ஒரு கோல் கூட விட்டுக் கொடுக்காமல் (கிளீன் ஷீட்) புதிய உலக சாதனையை ஸ்பெயின் படைத்துள்ளது. இதற்கு முன்பு இத்தாலி (1990) மற்றும் சுவிட்சர்லாந்து (2006-10) ஆகிய அணிகள் தலா 5 போட்டிகளில் கோல் விட்டுக் கொடுக்காமல் இருந்த சாதனையை ஸ்பெயின் முறியடித்துள்ளது.

ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவு கலைந்தது.. போர்ச்சுகலை 1-0 என வீழ்த்தி ஸ்பெயின் அபார வெற்றி!

ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவு கலைந்தது.. போர்ச்சுகலை 1-0 என வீழ்த்தி ஸ்பெயின் அபார வெற்றி!

மேலும் ஸ்பெயின் கோல்கீப்பர் உனாய் சிமோன் உலகக்கோப்பையில் தொடர்ந்து 609 நிமிடங்கள் ஒரு கோல் கூட விட்டுக் கொடுக்காமல் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இதற்கு முன்பு 1990 உலகக்கோப்பையில் இத்தாலியின் வால்டர் ஜெங்கா படைத்திருந்த 517 நிமிட சாதனையை சிமோன் முறியடித்தார். போர்ச்சுகலுக்கு எதிரான போட்டியில் ரொனால்டோவின் இரண்டு கடினமான கோல் முயற்சிகளை சிமோன் தடுத்து நிறுத்தினார்.

ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் மாற்று வீரர் மைக்கல் மெரினோ அடித்த கோல் ஸ்பெயினுக்கு வெற்றியைத் தேடித்தந்தது. இதன் மூலம் 2010 உலகக்கோப்பைக் வெற்றிக்குப் பிறகு முதல் முறையாக ஸ்பெயின் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

Story first published: Tuesday, July 7, 2026, 7:52 [IST]
Other articles published on Jul 7, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+