குரேஷியாவிடம் பாடம் கற்போம்..... ஹர்பஜனின் உருக்கமான வேண்டுகோள்!
Recommended Video

டெல்லி: 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட குரேஷியா உலகக் கோப்பையில் விளையாடுகிறது. ஆனால் இந்தியா விளையாட முடியாததற்கு காரணம் நாம்தான் என்று கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து பைனலில் குட்டி நாடான குரேஷிய விளையாடியது. பைனலில் பிரான்சிடம் 4-2 என்ற கோல் கணக்கில் குரேஷியா தோல்வி அடைந்தது.

ஆனாலும் முதல் முறையாக உலகக் கோப்பை பைனல் முன்னேறியதன் மூலம் பலருடைய பாராட்டை பெற்று வருகிறது குரேஷியா.
இந்த நிலையில், பைனல் துவங்குவதற்கு முன்பாக, டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்.
50 லட்சம் மக்கள் தொகை குட்டி நாடான குரேஷியா பைனல் விளையாடுகிறது. ஆனால் 135 கோடி மக்கள் தொகை கொண்ட நாம், ஹிந்து - முஸ்லிம் என போட்டி போடுகிறோம். சிந்தனையை மாற்றினாலும் நாடும் மாறும் என்று அந்த செய்தியில் ஹர்ஜன் கூறியுள்ளார்.
இதனிடையில், தனது டுவிட்டை சரியான கோணத்தில் பார்க்க வேண்டும். மிகப் பெரிய விளையாட்டு பாரம்பரியம் உள்ள இந்தியாவால் ஏன் உலகக் கோப்பையில் விளையாட முடியவில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும் என்று அதற்கு விளக்கமும் கூறியுள்ளார் ஹர்பஜன்.


Click it and Unblock the Notifications