For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடுவரை திட்டியதாக புகார்.. கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு 4 போட்டிகளில் விளையாட தடை

உலக கோப்பை தகுதிச் சுற்று 4 போட்டிகளில் விளையாட கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

By Karthikeyan

டெல்லி: நடுவரை திட்டியதாக அர்ஜெண்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி மீது புகார் எழுந்துள்ளது. இதையடுத்து 4 உலககோப்பை தகுதிச் சுற்று போட்டிகளில் விளையாட அவருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் அர்ஜெண்டினாவில் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில், கடந்த 24ஆம் தேதி அர்ஜெண்டினா - சிலி அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் அர்ஜெண்டினா அணி 1-0 என வெற்றி பெற்றது.

Lionel Messi banned for four games

இந்தப் போட்டியின் போது அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி ரெப்ரீயைப் பார்த்து தவறாகப் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆட்டத்தின் போது ஃபவுல் கொடுத்த ரெப்ரீயை நோக்கி மெஸ்சி தரக்குறைவான வார்த்தைகளைக் கூறி சைகை காட்டியுள்ளார். மேலும், கை குலுக்க முன்வந்த ரெப்ரீயிடம் மறுப்பு தெரிவித்துள்ளார் என்று அவர் மீது புகார் கூறப்பட்டது.

இதனை விசாரித்த உலக கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (FIFA) 4 உலககோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் மெஸ்சி பங்கேற்க தடை விதித்துள்ளது.

Story first published: Tuesday, March 28, 2017, 20:59 [IST]
Other articles published on Mar 28, 2017
English summary
Argentina Lionel Messi has been banned from Argentina's next four World Cup qualifiers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+