உலககோப்பை கால்பந்து வரலாற்றில் மெஸ்ஸி புது சாதனை.. கோப்பையுடன் திரும்புவாரா ?
கத்தார் : ஃபிஃபா உலககோப்பை கால்பந்து தொடரில் இன்று இறுதிப் போட்டியில் களமிறங்குவது மூலம் மெஸ்ஸி புதி யஉலக சாதனை படைக்க உள்ளார்.
கால்பந்து உலக கோப்பை என்பது கிரிக்கெட் உலககோப்பை போல், ஒரு சில அணிகள் தான் அனைத்து உலககோப்பையிலும் விளையாடும் தொடர் கிடையாது.
உலககோப்பை கால்பந்து தொடரில் போட்டியை நடத்தும் அணி மட்டும் தான் நேரடியாக தகுதி பெறும். மற்ற அணிகள் எல்லாம் தகுதி சுற்றில் பங்கேற்ற பிறகு தான் உலககோப்பையில் விளையாடும்.

5வது உலககோப்பை கால்பந்து
4 பேர் சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி போன்ற பலமான அணியே கடந்த 2 உலககோப்பையில் விளையாடவில்லை என்றால் பார்த்து கொள்ளுங்கள். இதனால் உலககோப்பையை வெல்லும் கனவை விட, அந்த தொடரில் தகுதி பெறுவது என்பதே பெரும் கடினமான சூழலாகும். இந்த நிலையில் தான் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி 2006ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 உலககோப்பை தொடரில் விளையாடி வருகிறார்.

26வது போட்டி
இதன் மூலம் உலககோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக போட்டியில் விளையாடிய வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்துள்ளார். இன்று இறுதிப் போட்டியில் களமிறங்கியது மூலம் 26 உலககோப்பை கால்பந்து போட்டியில் விளையாடி புதிய சாதனை படைத்திருக்கிறார். நடப்பு தொடரில் மெஸ்ஸி 5 கோல்களையும், 3 முறை கோல்கள் போட உதவி செய்து இருக்கிறார்.

முந்தைய சாதனை
இதற்கு முன்பு ஜெர்மனி வீரர் லோத்தர் மாத்தாஸ் 25 போட்டிகளில் விளையாடியது முந்தைய சாதனையாக கருதப்படுகிறது. ஏற்கனவே 2014ஆம் ஆண்டு ஜெர்மனியுடன் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி தோல்வியை தழுவியது.

8 ஆண்டுகள்
அடுத்து 2018 உலககோப்பையில் ரவுண்ட் ஆப் 16 சுற்றில் பிரான்ஸ் அணியுடன் அர்ஜென்டினா மோதியது. இதில் 4க்கு3 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவி வெளியேறியது. தற்போது 8 ஆண்டுகள் கழித்து தனது 35வது வயதில் மெஸ்ஸி இறுதி போட்டியில் விளையாடுகிறார். இந்த கடைசி வாய்ப்பை அவர் பயன்படுத்தி கொள்வாரா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications