Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'கப்' வாங்கிட்டுதான் கல்யாணம் மெஸ்ஸி சபதம்: காத்திருக்கும் காதலி!

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு அர்ஜென்டினா அணியை வெற்றிக் கோல் நோக்கி நகர்த்தி வருகிறார் அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் மெஸ்ஸி. உலக அளவில் அதிக கால்பந்து ரசிகைகளை கவர்ந்த வீரரான இவருக்கு இம்முறை எப்படியும் கோப்பையை வென்றே ஆகவேண்டும் என்பது லட்சியமாம்.

காரணம் கோப்பையை வென்றுவிட்டுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று தனது காதலியிடம் சபதம் செய்திருக்கிறாராம் மெஸ்ஸி.

மெஸ்ஸியின் அழகு நிலா

மெஸ்ஸியின் அழகு நிலா

கால்பந்து போட்டியில் எதிரணிக்கு எதிராக கோல் போட்டு அசத்தும் மெஸ்ஸியின் மனதில் காதல் கோல் போட்டவர் பிரபல மாடல் அழகி ஆண்டநிலா.

நிச்சயம் முடிஞ்சிருச்சே

நிச்சயம் முடிஞ்சிருச்சே

மெஸ்ஸி - நிலாவிற்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே திருமண நிச்சயம் முடிந்துவிட்டதாம். ஒரே வீட்டில் வசிக்கும் இந்த ஜோடிக்கு குழந்தை கூட பிறந்துவிட்டதாம்.

கால்பந்து கோப்பை

கால்பந்து கோப்பை

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கோப்பையை வென்ற பின்னர்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று மெஸ்ஸி சபதம் போட்டிருப்பதே திருமணம் தாமதமாகக் காரணம் என்கின்றனர்.

கண்டிப்பா கப் வாங்கணும்

கண்டிப்பா கப் வாங்கணும்

எனவே அர்ஜென்டினா அணி கோப்பையை ஜெயிக்கவேண்டும் என்று யார் வேண்டிக்கொள்கிறார்களோ இல்லையோ, ஆண்டநிலா கண்டிப்பாக கடவுளை வேண்டிக்கொண்டிருப்பார்.

Story first published: Wednesday, July 2, 2014, 10:53 [IST]
Other articles published on Jul 2, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+