For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

உயிர் தப்பிய மெஸ்ஸி.. வரவேற்பு நிகழ்ச்சியில் நிகழ இருந்த அசம்பாவிதம் தவிர்ப்பு.. என்ன நடந்தது?

பியுனோஸ் ஐரீஸ் : 2022ஆம் ஆண்டு உலககோப்பையை வென்ற மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணிக்கு அந்நாட்டு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஞாயிற்று கிழமை உலககோப்பையை வென்ற மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டின அணி, அன்று இரவே தாயகம் திரும்பியது.

அப்போது மெஸ்ஸி, அன்று இரவு படுக்கையில் உலககோப்பையை கட்டி அணைத்து போஸ் கொடுத்தார்.

மெஸ்ஸி உலககோப்பையை வென்றாலும், ரொனால்டோ தான் சிறந்த வீரர்.. 5 காரணங்கள் இதோ? மெஸ்ஸி உலககோப்பையை வென்றாலும், ரொனால்டோ தான் சிறந்த வீரர்.. 5 காரணங்கள் இதோ?

லட்சக்கணக்கான மக்கள்

லட்சக்கணக்கான மக்கள்

இந்த புகைப்படம் தற்போது வைரலானது. இந்த நிலையில், அர்ஜென்டின கால்பந்து அணியை வரவேற்க லட்சக்கணக்கான மக்கள் கூடி இருந்தனர். இதனால் தலைநகர் பியுனோஸ் ஐரீஸ் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நம்ம ஊர் கிரிக்கெட் வீரர்கள் திறந்த வெளி பேருந்தில் அமர்ந்து நகர் உலா வந்தார்கள் அல்லவா?

திறந்தவெளி பேருந்து

திறந்தவெளி பேருந்து

அதே போல் மெஸ்ஸியும் அவர்களது அணி வீரர்களும் திறந்தவெளி பேருந்தில் அமர்ந்து வந்தார்கள். அப்போது ஏராளமான மக்கள், மெஸ்ஸி மெஸ்ஸி என்று உற்சாகமாக குரல் கொடுத்தார்கள். அந்த இடத்தில் This is Messi KGF என்று பின்னனி குரல் கொடுத்து மியூசிக் போட்டு இருந்தால் செம கெத்தாக இருந்திருக்கும்.

விபத்து தவிர்ப்பு

விபத்து தவிர்ப்பு

இந்த நிலையில் தான் வீதியில் மேலே சென்ற மின்சார ஓயர் வீரர்கள் மீது பட இருந்தது. அப்போது அங்க இருந்தவர்கள் கத்தியதை அடுத்து சுதாரித்து கொண்ட மெஸ்ஸி உள்ளிட்ட வீரர்கள் டக்கென்று குணிந்த கொண்டார்கள். இல்லை என்றால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும். வரலாற்று சாதனை படைத்த நாயகன்களுக்கு உரியவரவேறபு அளிக்கும் போது பாதுகாப்பு ஏற்பாடுகளை எல்லாம் சரி செய்ய மாட்டீர்களா என்று பல்வேறு தரப்பினும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

 செலிபிரட்டிக்கு கண்டனம்

செலிபிரட்டிக்கு கண்டனம்

இதனிடையே, கத்தாரில் மெஸ்ஸியின் கொண்டாட்டத்தின் போது உள்ளே புகுந்து வாழ்த்து சொல்ல வந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் சால்ட் பேவை மெஸ்ஸி கண்டுக்கொள்ளாமல் சென்றுவிட்டார். எனினும் அவர் வலுக்கட்டாயமாக மெஸ்ஸியை பிடித்து இழுத்து புகைப்படம் எடுத்துள்ளார். வீரர்களின் தனி நபர் சுதந்திரத்தில் புகுந்த சால்ட் பேக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

Story first published: Tuesday, December 20, 2022, 23:16 [IST]
Other articles published on Dec 20, 2022
English summary
Lionel messi escaped from a major accident in reception உயிர் தப்பிய மெஸ்ஸி.. வரவேற்பு நிகழ்ச்சியில் நிகழ இருந்த அசம்பாவிதம் தவிர்ப்பு.. என்ன நடந்தது?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X