Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அர்ஜெண்டினா வீரர் லியோனல் மெஸ்சி வேற்றுகிரகவாசி- நைஜீரிய பயிற்சியாளர் சொல்கிறார்

ரியோடி ஜெனிரோ: அர்ஜெண்டினா கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்சி ஜூப்பிட்டர் கிரகத்தில் இருந்து குதித்தவர் என்று நைஜீரிய அணியின் பயிற்சியாளர் புகழாரம் சூட்டியுள்ளார்.

உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளில் நேற்று குரூப் எப் பிரிவில் அர்ஜெண்டினாவும், நைஜீரியாவும் மோதின. இரு அணிகளும் பலமானவை என்பதால் ஆட்டத்தில் அனல் பறந்தது.

ஆரம்பமே அசத்தல்..

ஆரம்பமே அசத்தல்..

ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே அர்ஜெண்டினாவின் நட்சத்திர ஆட்டக்காரர் லியோனல் மெஸ்சி கோல் போட்டு அசத்தினார். அர்ஜெண்டினா ரசிகர்கள் ஆரவாரம் அடங்குவதற்குள் அடுத்த நிமிடமே நைஜீரியாவின் அகமது முசா கோல் அடித்து நைஜீரிய ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் மிதக்க செய்தார்.

மீண்டும் பதிலடி

மீண்டும் பதிலடி

இதன்பிறகு ஆட்டம் சமபலமாக இருந்தபோது மெஸ்சி மீண்டும் 45வது நிமிடத்தில் தனது அணிக்காக கோலை பதிவு செய்தார். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏறியது. விடுவாரா அகமது மூசா, 47வது நிமிடத்தில், மீண்டும் ஒரு கோலை போட்டு ஆட்டத்தை மீண்டும் சமநிலைக்கு கொண்டுவந்தார்.

முன்னிலை பெற்ற அர்ஜெண்டினா

முன்னிலை பெற்ற அர்ஜெண்டினா

இதனிடையே 50வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் மார்கஸ் ரோஜோ தனது முட்டியால் தட்டி ஒரு கோலை போட அர்ஜெண்டினா மீண்டும் முன்னிலைக்கு வந்தது.

ஆட்டம் அபாரம்

ஆட்டம் அபாரம்

ஆட்ட நேர இறுதிவரை அர்ஜெண்டினா இந்த முன்னணியை தக்க வைத்துக்கொண்டதால் 3க்கு 2 என்ற கோல் கணக்கில் அந்த அணி வெற்றி கண்டது. இரு அணிகளும் சிறப்பாக விளையாடி அடுத்தடுத்து கோல்போட்டு ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்த்தி வைத்திருந்தன.

கடவுளின் ஆசி பெற்றவர்

கடவுளின் ஆசி பெற்றவர்

இதனிடையே ஆட்டம் முடிவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நைஜீரிய பயிற்சியாளர் ஸ்டீபன் கேசி கூறியதாவது: லியோனல் மெஸ்சி ஆர்ஜெண்டினா அணியின் அச்சாணி போன்றவர். அவர் கடவுளின் ஆசி பெற்றவராக தெரிகிறார். அவரை தவிர்த்து அர்ஜெண்டினா அணியை நினைத்து பார்க்க முடியாது.

வானில் இருந்து வந்தவர்

வானில் இருந்து வந்தவர்

அர்ஜெண்டினா அணியில் திறமையான பல வீரர்கள் இருக்கலாம். ஆனால் மெஸ்சி ஜூப்பிட்டரில் இருந்து குதித்தவர். இவ்வாறு ஸ்டீபன் கேசி தெரிவித்தார். நமது நாட்டில் ஜூப்பிட்டரை வியாழன் அல்லது குரு என்று அழைப்போம். ரோம்நாட்டில் ஜூப்பிட்டர், ஆகாய கடவுள் என்று அழைக்கப்படுவார்.

சமநிலையில் நட்சத்திரங்கள்

சமநிலையில் நட்சத்திரங்கள்

நடப்பு உலக கோப்பையில் லியோனல் மெஸ்சி மொத்தம் நான்கு கோல் அடித்து, பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மர் அடித்துள்ள கோல்களை சமன் செய்துள்ளார். அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை இவ்விரு நட்சத்திரங்களும் பகிர்ந்துகொண்டுள்ளனர். கடந்த உலக கோப்பையில் எட்டு ஆட்டங்களில் பங்கேற்ற மெஸ்சி ஒரு கோல்தான் அடித்திருந்தார்.

அர்ஜெண்டினா ரிட்டர்ன்..

அர்ஜெண்டினா ரிட்டர்ன்..

நேற்றைய ஆட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மெஸ்சி "விளையாட்டை ரசித்து ஆடும் அணியாக நைஜீரியாவை பார்க்க முடிந்தது. அர்ஜெண்டினா தனது வழக்கமான ஆட்டத்துக்கு இப்போதுதான் திரும்பியுள்ளதாக நினைக்கிறேன். இதே நிலைத் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று மெஸ்சி தெரிவித்தார்.

Story first published: Thursday, June 26, 2014, 17:31 [IST]
Other articles published on Jun 26, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+