Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அசத்தும் மெஸ்ஸி... இந்திய பெண்களின் கனவு ஹீரோ!

ரியோ டி ஜெனிரோ: அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி இந்திய பெண்களிடையே ஹீரோவாக விளங்குவதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளது.

உலகமே கொண்டாடி வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் பிரேசிலில் நடைபெற்று வருகிறது.

32 அணிகளும் தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றனர். விடிய விடிய பார்த்து ரசித்து வருகின்றனர் கால்பந்தாட்ட ரசிகர்கள்

4000 பெண்கள்

4000 பெண்கள்

இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்தாட்டப் மிகவும் பிரபலமான கால்பந்து வீரர் யாரென்று திருமண இணையதளம் ஒன்று 4000 பெண்களிடம் சமிபத்தில் ஆய்வு நடத்தியது.

பெண்களை கவர்ந்த மெஸ்ஸி

பெண்களை கவர்ந்த மெஸ்ஸி

இதில் இந்தியாவில் 59.6 சதவிகித பெண்கள் மெஸ்ஸிக்கு வாக்களித்துள்ளனர்.

கிரிஸ்டியானோ ரொனால்டோ

கிரிஸ்டியானோ ரொனால்டோ

மெஸ்ஸிக்கு அடுத்தபடியாக போர்ச்சுக்கல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனல்டோவுக்கு 53.3 சதவிகித பெண்கள் வாக்களித்துள்ளனர். மூன்றாவதாக 51.5 சதவிகித பெண்கள் இங்கிலாந்து அணியின் வேண் ரூணியை தேர்ந்தெடுத்துள்ளனர்.

டேவிட் பெக்காம் - விக்டோரியா

டேவிட் பெக்காம் - விக்டோரியா

பிரபலமான நட்சத்திர ஜோடிக்கான ஆய்வில் டேவிட் பெக்காம் மற்றும் அவரது மனைவி விக்டோரியாவுக்கு 48.2 சதவிகித பெண்கள் வாக்களித்துள்ளனர்.

கிரிஸ்டியானோ ரொனால்டோ

கிரிஸ்டியானோ ரொனால்டோ

அடுத்தபடியாக ஜெரார்ட் மற்றும் அவரது மனைவி ஷகிராவிற்கு 28.3 சதவிகிதமும், கிறிஸ்டினோ ரொனால்டோ - ஐரினா தம்பதியருக்கு 23.5 சதவிகித பெண்களும் வாக்களித்துள்ளனர்.

பெக்காம் மவுசு கூடுதே

பெக்காம் மவுசு கூடுதே

திருமணமான கால்பந்து வீரர் ஆய்வில் 48.3 சதவிகித பெண்கள் இங்கிலாந்தின் முன்னாள் நட்சத்திர வீரர் டேவிட் பெக்காமிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அடுத்ததாக மால்தினி வீரருக்கு 31.3 சதவிகித பெண்கள் வாக்களித்துள்ளனர்.

அழகு கொஞ்சும் ஆட்டக்காரர்

அழகு கொஞ்சும் ஆட்டக்காரர்

அழகான கால்பந்து வீரருக்கான ஆய்வில் பிரேசில் அணியின் ஆட்டக்காரர் ரிக்கார்டோ காகாவிற்கு 49.3 சதவிகித இளம்பெண்கள் வாக்களித்துள்ளனர்.

Story first published: Thursday, June 19, 2014, 6:35 [IST]
Other articles published on Jun 19, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+