Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தன் மீது காரித் துப்பிய ரசிகருக்கு ஓங்கி 'பஞ்ச்' விட்ட கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி

டோக்கியோ: ஜப்பானில் நடந்த ஃபீஃபா கிளப் கால்பந்தாட்ட உலகக் கோப்பை போட்டியில் கோப்பையை வென்ற பார்சிலோனா அணி வீரரான லயனல் மெஸ்ஸி மீது காரித் துப்பிய ரிவர் பிளேட் கிளப் ரசிகரை அவர் ஓங்கிக் குத்திவிட்டார்.

ஃபீஃபா கிளப் கால்பந்தாட்ட கிளப் உலகக் கோப்பை போட்டிகள் கடந்த 10ம் தேதி முதல் 20ம் தேதி வரை ஜப்பானில் நடைபெற்றது. இந்த போட்டியில் பார்சிலோனா அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

Lionel Messi Punches Fan Who Spit at Him

பார்சிலோனோ அணிக்கு விளையாடிய அர்ஜென்டினாவைச் சேர்ந்த வீரர் லயனல் மெஸ்ஸி வழக்கம் போல அருமையாக ஆடினார். போட்டிகள் முடிந்த பிறகு மெஸ்ஸி உள்ளிட்ட வீரர்கள் டோக்கியோவில் உள்ள நரிதா விமான நிலையத்தில் இருந்து தங்கள் நாடுகளுக்கு கிளம்பினர்.

விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த அர்ஜென்டினாவைச் சேர்ந்த ரிவர் பிளேட் கிளப் ரசிகர்கள் மெஸ்ஸியை அவமானப்படுத்தினர். அதில் ஒருவர் மெஸ்ஸி மீது காரித் துப்பினார். இதனால் கோபம் அடைந்த மெஸ்ஸி அந்த ரசிகரை தனது கையால் ஓங்கி குத்தினார்.

இதை பார்த்த பார்சிலோனா பயிற்சியாளர் லூயி என்ரிக் ஓடி வந்து மெஸ்ஸியை சமாதானப்படுத்தினார்.

Story first published: Tuesday, December 22, 2015, 15:59 [IST]
Other articles published on Dec 22, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+