For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

வரி ஏய்ப்பு வழக்கு.. கால்பந்து வீரர் மெஸ்சிக்கு 21 மாத சிறை தண்டனை உறுதி

By Karthikeyan

பார்சிலோனா: வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கில் 21 மாத சிறைத்தண்டனையை எதிர்த்து கால்பந்து வீரர் மெஸ்சி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

கால்பந்து உலகின் ஜாம்பவான் என வர்ணிக்கப்படுபவர் மெஸ்ஸி. அர்ஜெண்டினா, பார்சிலோனா அணிகளுக்காக விளையாடி வரும் இவர் வரி ஏய்ப்பு செய்ததாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.

Lionel Messi's 21-month jail sentence upheld by Spanish supreme court

கடந்த 2007 முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், 4.1 மில்லியன் யூரோ அளவுக்கு வரி ஏய்ப்பு செய்ததாக கூறி கேடலன் நீதிமன்றம் மெஸ்சிக்கு 21 மாதம் சிறை தண்டனை விதித்தது. மெஸ்ஸியின் தந்தையும் ஜார்ஜ், ஸ்பெயின் நாட்டுக்கு வரி மோசடி செய்ததால் அவருக்கும் 21 மாதம் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், வரி ஏய்ப்பு நீதிமன்றம் மெஸ்ஸிக்கு ரூ.15 கோடி அபராதம் வித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்ப்பு லியோனல் மெஸ்ஸி, அவரது தந்தை மேல்முறையீடு செய்திருந்தனர். இந்நிலையில் வழக்கை விசாரித்த ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் இந்த மேல் முறையீடு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் மெஸ்ஸிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Story first published: Wednesday, May 24, 2017, 21:48 [IST]
Other articles published on May 24, 2017
English summary
Bad news for FC Barcelona and Argentina superstar Lionel Messi as his 21-month jail sentence in the tax fraud case has been upheld by Spain's Supreme Court.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X