For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஃபிபா உலகக்கோப்பை.. களமிறங்கும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா.. சவால் அளிக்குமா சவுதி அரேபியா?

தோஹா: ஃபிபா உலகக்கோப்பை தொடரில் குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள வலிமையான அர்ஜென்டினா அணியை எதிர்த்து சவுதி அரேபியா அணி களமிறங்க உள்ளது.

ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் நட்சத்திர வீரர் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணிக்கு எதிராக சவுதி அரேபியா அணி களமிறங்க உள்ளது.

இதுவரை 1930, 1978, 1986, 1990 மற்றும் 2014 என 5 முறை உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா விளையாடி உள்ளது. அதில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

கடைசி உலகக்கோப்பை

கடைசி உலகக்கோப்பை

இந்த முறை அர்ஜென்டினா அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் மெஸ்ஸிக்கு கடைசி உலகக்கோப்பை தொடராக கருதப்படுகிறது. ஏற்கனவே 2021ம் ஆண்டு கோபா அமெரிக்கா கோப்பையை வென்றுள்ளதால், இம்முறை கோப்பையை அர்ஜென்டினா அணி வெல்ல வேண்டும் என்று தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதற்கேற்ப அர்ஜென்டினா அணியில் உள்ள வீரர்கள் அனுபவமும், இளமையும் மிகுந்து காணப்படுகின்றனர்.

அர்ஜென்டினா அணி

அர்ஜென்டினா அணி

இதுமட்டுமல்லாமல் அர்ஜென்டினா அணி கடந்த ஆண்டு முதல் விளையாடிய 35 போட்டிகளில் தொடர்ந்து வெற்றிபெற்று வந்துள்ளது. அதில் நடப்பாண்டில் விளையாடிய 10 போட்டிகளில் 8 வெற்றியும், 2 போட்டிகள் டிராவிலும் முடிவடைந்துள்ளது. இதனால் ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரை பெரும் வெற்றியுடன் தொடங்க அர்ஜென்டினா அணி முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சவுதி அரேபியா அணி

சவுதி அரேபியா அணி

சவுதி அரேபியா அணியை பொறுத்தவரையில் 6வது முறையாக விளையாடுகிறது. கடந்த முறையில் ரஷ்யாவுக்கு எதிரான முதல் போட்டியில், அந்த அணியிடம் 5-0 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது. சர்வதேச கால்பந்து தரவரிசையில் 51வது இடத்தில் உள்ள சவுதி அரேபியா அணியின் சமீப ஃபார்ம் பெரிதாக இல்லை. அண்மையில் ஆடிய 10 போட்டிகலில் 2 வெற்றி, 3 டிரா மற்றும் 5 தோல்வியுடன் உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்க உள்ளது.

என்ன திட்டம்?

என்ன திட்டம்?

நாளைய போட்டியில் அர்ஜென்டினா அணி 4-3-1-2 என்ற ஃபார்மேஷனில் விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளது. முழுக்க முழுக்க தாக்குதல் பாணி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி வீரர்கள் ஈடுபட அதிக வாய்ப்புகள் உள்ளது. இதேபோல் சவுதி அரேபியா அணி 4-3-3 என்ற ஃபார்மேஷனில் விளையாட வாய்ப்புகள் உள்ளது.

களமிறங்கும் மெஸ்ஸி

களமிறங்கும் மெஸ்ஸி

ஃபிபா உலகக்கோப்பைத் தொடரில் நட்சத்திர வீரர் மெஸ்ஸி விளையாடும் முதல் போட்டி என்பதால், இந்தப் போட்டிக்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் மைதானத்தில் அர்ஜென்டினா அணியின் ரசிகர்கள் அதிகளவில் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, November 22, 2022, 6:01 [IST]
Other articles published on Nov 22, 2022
English summary
Saudi Arabia is going to play against the strong Argentina team in Group C of the FIFA World Cup 2022 in Qatar
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+