Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஃபிஃபா உலககோப்பை இறுதி போட்டி - வெற்றி அருகே சென்ற அர்ஜென்டினா.. மெஸ்ஸி மேஜிக்

கத்தார் : உலககோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் மோதும் ஆட்டம் , ஒரு போர்க்களத்தில் படை வீரர்கள் மோதுவது போல் உள்ளது.

ஆட்டம் எதோ கால்பந்து தான், ஆனால் மல்யுத்தம் போட்டி போல் வீரர்கள் ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டும், தாக்கி கொண்டும் இருக்கிறாகள்.

மேலும் போட்டி கீழே விழும் வீரர்களும் ஆஸ்கார் விருது வாங்குவது போல் நடித்து மிரட்டுகிறார்கள்.

அனல் பறந்தது

அனல் பறந்தது

போட்டி தொடங்கியதில் இருந்தே இரு வீரர்களும் ஆக்கோரஷமாக விளையாடியதால் அனல் பறந்தது. போட்டி தொடங்கி 2 நிமிடத்திற்குள் 6 FOUL கள் நடைபெற்றுள்ளது. இதனால் ஆட்டத்தில் அனல் பறக்கிறது,ஆட்டத்தில் 8வது நிமிடம் கிடைத்த கோல் வாய்ப்பை அர்ஜென்டினா வீணடித்தது

ஃபிரி கீக்

ஃபிரி கீக்

போட்டியின் 9வது நிமிடத்தில் பிரான்ஸ் கோல் கீப்பர் ஹூகோ லோரிஸ் காயம் அடைந்தார். எனினும் அவர் போட்டியில் தொடர்ந்தார். ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் அர்ஜென்டின வீரர் அல்வரெஸ கையில் பந்து பட்டதால், பிரான்ஸ்க்கு ப்ரி கிக் தரப்பட்டது. ஆனால் அது கோலாக மாறவில்லை.

மெஸ்ஸி கோல்

மெஸ்ஸி கோல்

இதனையடுத்து, பிரான்ஸ் வீரர் பாக்சில் அர்ஜென்டின வீரரை தள்ளிவிட்டதால் பெனால்டி தரப்பட்டது. ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் கிடைத்த இந்த பெனால்டி வாய்ப்பை மெஸ்ஸி கோலாக மாற்றினார் . இதன் மூலம் அர்ஜென்டின ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.

அர்ஜென்டினா ஆதிக்கம்

அர்ஜென்டினா ஆதிக்கம்

இதனையடுத்து, பிரான்ஸ் வீரர்கள் உற்சாகம் குறைந்தது. இதனை பயன்படுத்தி கொண்டு அர்ஜென்டினா மேலும் அதிரடி ஆட்டத்தை அதிகப்படுத்தியது. ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் அர்ஜென்டின வீரர் டி மரியா 2வது கோல் அடித்தார். இந்த நிலையில், முதல் பாதி முடிவில் அர்ஜென்டினா 2க்கு0 என்ற கோல் கணக்கில் முன்னிலை உள்ளதால், அந்த அணி உலககோப்பையை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

Story first published: Sunday, December 18, 2022, 21:39 [IST]
Other articles published on Dec 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+