Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கால்பந்து மைதானத்தில் மறக்க முடியாத துயர சம்பவங்கள்.. மிருகங்கள் ஆகும் மனிதர்கள்.. தடுக்க என்ன வழி ?

கிழக்கு ஜாவா : இந்தோனேஷியாவில் நடைபெற்ற கால்பந்து மோதல் ஒன்றும் முதல் முறை நடைபெற்ற சம்பவம் அல்ல.

Recommended Video

Football களத்தில் மோதல் 174 பேர் உயிரிழப்பு! Indonesian Premier League

உலகில் அதிக பேரால் பார்க்க கூடிய விளையாட்டில் முதலிடத்தில் இருப்பது கால்பந்து, இரண்டாவது தான் கிரிக்கெட்.

கால்பந்து விளையாட்டில் எப்போதும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இதனால் அதை பார்க்கும் மனிதர்களுக்கும் எமோஷன்கள், கொஞ்சம் அதிகம் வருவது இயல்பு தான்.

கால்பந்து துயரம்

கால்பந்து துயரம்

ஆனால், அந்த எமோஷன்கள் நம்மை மீறும் அளவுக்கு நாம் இடம் கொடுக்க கூடாது. நமது கோபத்தை கட்டுப்படுத்தவில்லை என்றால், அது நம்மை மட்டுமல்லாமல் நம்மை சுற்றி உள்ளவர்களை சேர்த்து அழித்துவிடும். இந்த நிலையில், கால்பந்து மைதானங்களில் நடந்த துயரங்கள் குறித்து பார்க்கலாம்.

320 பேர் பலி

320 பேர் பலி

1964ஆம் ஆண்டு பெரு, அர்ஜென்டினா அணிகள் மோதிய ஒலிம்பிக் தகுதி சுற்று ஆட்டம் லிமாவில் நடைபெற்றது. இதில் 320 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக ஆயிரம் பேர் கடுகாயமடைந்தனர். விளையாட்டு போட்டியில் உயிரிழந்தவர்களில் இந்த துயர சம்பவம் தான் முதலிடத்தில் நீடிக்கிறது. தற்போது இதையே மிஞ்சும் அளவுக்கு இந்தோனேஷியாவில் நடைபெற்று இருக்கிறது.

97 பேர் பலி

97 பேர் பலி

இதை போன்று 1985 ஆம் ஆண்டு பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற ஐரோப்பிய கோப்பை இறுதிப்போட்டியில் லிவர்புல், ஜூவண்டஸ் அணிகள் மோதின. அப்போது மைதானம் சுவர் இடிந்து விழுந்ததில் 39 பேர் பலியாகினர் இதேபோன்று இங்கிலாந்தில் ஹில்ஸ்பர்க் மைதானத்தில் லிவர்புல் அணியும், நாட்டிங்காம் ஃபாரஸ்ட் அணியும் மோதின. கூட்ட நெரிசலில் சிக்கி 97 பேர் உயிரிழந்தனர்.

தடுக்க என்ன வழி

தடுக்க என்ன வழி

கால்பந்தில் எப்போதும் சொந்த மண்ணில் ஒரு போட்டி, அந்நிய மண்ணில் ஒரு போட்டி நடைபெறும். அப்படி நடக்கும் போது, அவர் அவர் சொந்த ஊரில் நடைபெறும் போட்டிகளுக்கு மட்டுமே டிக்கெட் தர வேண்டும். அந்நிய ரசிகர்களுக்கு டிக்கெட் வழங்க கூடாது. கால்பந்து மைதானத்தில் இருக்கைக்கு கூடுதலாக மக்களை உள்ளே அனுமதிக்க கூடாது. போட்டி நடைபெறும் போது தகாத முறையில் நடந்து கொள்ளும் ரசிகர்களை மைதானத்தை விட்டு வெளியேற்றி விட வேண்டும். இது போன்ற செயல் மூலம் இது போன்ற துயர சம்பவங்களை தடுக்கலாம்.

Story first published: Sunday, October 2, 2022, 16:36 [IST]
Other articles published on Oct 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+