Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் ஜொலித்த ஆசிய அணிகள்

ரியோடிஜெனிரோ: உலகமே எதிர்பார்த்து காத்துக்கிடக்கும், 20வது உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் வரும் 12ம்தேதி பிரேசிலில் தொடங்க உள்ளது. விளையாட்டு என்பதற்கு, அகராதியில் கிரிக்கெட் என்று பெயர் சூட்டிய இந்தியர்களுக்கு, இதன் மகத்துவம் தெரியாது. பெரும்பாலான ஆசிய நாடுகளும் கால்பந்தாட்டத்தை இரண்டாம்பட்சமாகத்தான் பார்க்கின்றன. இலங்கையோ, பாகிஸ்தானோ, நேபாளமோ, அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் கிரிக்கெட் மட்டும்தான். ஆனால் உலக அளவில் உலககோப்பை கால்பந்து போட்டிகள் மிக அதிக மக்களால் ரசிக்கப்படுகின்றன. இருப்பினும், ஆசிய நாடுகள் சில, உலக கோப்பைகளில் அசத்தியுள்ளன. அந்த அணிகளை பற்றிய ஒரு பார்வை.

வட கொரியா

வட கொரியா

1966 அப்புறம், 2010 என இரு உலக கோப்பைகளில் மட்டுமே வட கொரிய அணி பங்கேற்றுள்ளது. 1966ல் பங்கேற்ற முதல் போட்டியிலேயே வலிமையான அணியான இத்தாலியை ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில், மண்ணை கவ்வ செய்தது. காலிறுதிவரை முன்னேறிய வடகொரியா 5-3 என்ற கணக்கில் போர்ச்சுக்கலிடம் தோற்று வெளியேறியது. ஆட்டத்தின் முதல் 30 நிமிடங்களில் 3 கோல்களை அடித்தது வடகொரியா. ஆனால் போர்ச்சுக்கல் திடீரென சுறுசுறுப்படைந்து 5 கோல்களை போட்டு வட கொரியாவை தோற்கடித்தது.

அனைத்திலும் தோல்வி

அனைத்திலும் தோல்வி

2010ம் ஆண்டு உலககோப்பை போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்ற வடகொரியா, முதல் போட்டியிலேயே பலம் வாய்ந்த பிரேசிலை சந்தித்தது. இருப்பினும் 2க்கு 1 என்ற கணக்கில் வட கொரியா போராடி தோற்றது. இதற்கு அடுத்த மேட்சில் மீண்டும் போர்ச்சுக்கலிடம் சிக்கி சின்னாபின்னமானது வடகொரியா. இம்முறை 7க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வடகொரியா வீழ்ந்தது. அதற்கு அடுத்த மேட்சில் ஐவரி கோஸ்டிடம் 3க்கு பூஜ்யம் என்ற கணக்கில் தோற்று குரூப் போட்டியுடன் வெளியேறியது வடகொரியா. இவ்வாண்டுக்கான உலக கோப்பை போட்டியில் பங்கேற்க அந்த அணி தகுதி பெறவில்லை.

ஆசிய நம்பர் ஒன் அணி

ஆசிய நம்பர் ஒன் அணி

உலக கால்பந்தாட்ட சம்மேள ரேங்கிங் பட்டியலில், ஆசியாவின் நம்பர்-1 அணி என்ற பெருமை ஈரான் பெற்றுள்ளது. உலக அளவில் 37வது ரேங்க் ஈரானுக்கு. 1978ம் ஆண்டு முதலாவதாக உலக கோப்பை போட்டியில் பங்கேற்ற இந்த அணி 1998 மற்றும் 2006ம் ஆண்டு நடந்த உலக கோப்பைகளிலும் பங்கேற்றுள்ளது. நடப்பு உலக கோப்பையில் விளையாடவும் தகுதி பெற்றுவிட்டது.

அமெரிக்காவை வீழ்த்தியது

அமெரிக்காவை வீழ்த்தியது

1978ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் நெதர்லாந்து, பெரு நாடுகளுக்கு எதிரான போட்டிகளில் தோற்று, அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தாலும், ஸ்காட்லாந்துடனான மேட்சை டிரா செய்தது. 1998ல் அமெரிக்காவை 2க்கு 1 என்ற கணக்கில் தோற்கடித்து அசத்தியது ஈரான். யுகோஸ்லாவியா மற்றும் ஜெர்மனியுடன் தோற்றதால் நாக்-அவுட் சுற்றுக்குள் செல்ல முடியாமல் வெளியேறியது. 2010 உலக கோப்பையை பொறுத்தளவில் போர்ச்சுக்கல் மற்றும் மெக்சிகோவிடம் தோல்வியடைந்த ஈரான், அங்கோலாவுடனான போட்டியை டிரா செய்தது.

லேட்டஸ்ட் அணி ஜப்பான்

லேட்டஸ்ட் அணி ஜப்பான்

கொஞ்சம் லேட்டாக 1998ம் ஆண்டில்தான் உலக கோப்பைக்குள் நுழைந்தது ஜப்பான். ஆனால் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த அணி என்ற பெருமை ஜப்பானுக்கு. ஏனெனில் அதன்பிறகு அனைத்து உலக கோப்பைகளிலும் பங்கேற்கும் தகுதியை அந்த அணி பெற்றுவருகிறது. ஜப்பானின் மிகச்சிறந்த உலக கோப்பை ஆட்டம் 2002 மற்றும் 2010ம் ஆண்டு உலக கோப்பைகளில் வெளிப்பட்டது.

நாக்-அவுட் வரை முன்னேற்றம்

நாக்-அவுட் வரை முன்னேற்றம்

200ல் ரஷ்யா மற்றும் துனிஷியா அணிகளை தோற்கடித்த ஜப்பான், பல்கேரியாவுடன் டிரா செய்தது. நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான், துருக்கியால் தோற்கடிக்கப்பட்டு வெளியேறியது. 2010 உலக கோப்பையில் நெதர்லாந்துடன் தோல்வியடைந்த ஜப்பான், அதன்பிறகு கேமரூன், டென்மார்க் ஆகிய நாடுகளை வென்று நாக்-அவுட் சுற்றுக்குள் சென்றது. பராகுவே அணியிடம் தோற்று வெளியேறியது.

ஆசிய புலி தென்கொரியா

ஆசிய புலி தென்கொரியா

ஆசியாவிலேயே சிறந்த அணியாக ரசிகர்களால் மதிக்கப்படும் தென்கொரியா 1954ல் முதன்முறையாக உலக கோப்பைக்குள் காலடி எடுத்து வைத்தது. ஆனால் ஹங்கேரியிடம் 9க்கு பூஜ்யம் என்ற கணக்கிலும், துருக்கியிடம் 7க்கு பூஜ்யம் என்ற கணக்கிலும் தோற்று வெளியேறியது. 1986ம் ஆண்டு உலக கோப்பையில் மீண்டும் விளையாட தகுதி பெற்ற தென்கொரியா அதன்பிறகு அனைத்து உலக கோப்பைகளிலும் விளையாடியுள்ளது. மொத்தம் 9 உலக கோப்பைகளில் விளையாடிய ஒரே ஆசிய அணி என்ற பெருமையை தென்கொரியா பெற்றுள்ளது.

அடுத்தடுத்த வெற்றிகள்

அடுத்தடுத்த வெற்றிகள்

2002 உலக கோப்பையில் தென்கொரியா பல அதிர்ச்சிகளை ரசிகர்களுக்கு கொடுத்தது. அதுவரை எந்த உலக கோப்பை போட்டியிலும் வெற்றி பெற்றிராத தென்கொரியா, லீக் சுற்றில் போலந்து, போர்ச்சுக்கல் நாடுகளை வீழ்த்தியதுடன், அமெரிக்காவுடன் டிரா செய்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. பலம் வாய்ந்த இத்தாலியை 2க்கு ஒன்று என்ற கணக்கில் தோற்கடித்து போட்டிதொடரைவிட்டே இத்தாலியை வெளியேற்றியது தென்கொரியா.

அரை இறுதியில் தோல்வி

அரை இறுதியில் தோல்வி

காலிறுதியில் மற்றொரு பலம் பொருந்திய அணியான ஸ்பெயினை 5க்கு 3 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது தென்கொரியா. அரை இறுதியில் 1க்கு பூஜ்யம் என்ற கோல்கணக்கில் ஜெர்மனியிடம் தோற்றதால் தென்கொரியாவின் உலககோப்பை கனவு தகர்ந்தது. இருப்பினும் ஆசிய நாடுகளை சேர்ந்த ஒரு அணி பெற்ற உச்சபட்ச வெற்றியாக இப்போதுவரை பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, June 5, 2014, 16:15 [IST]
Other articles published on Jun 5, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+