Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்பார்டா ப்ராக்குடன் மோத உள்ள லிவர்பூல்.. மற்றொரு ஐரோப்பா லீக் போட்டியில் பிரைட்டன் - ரோமா மோதல்

லண்டன் : பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் முன்னணி அணியான லிவர்பூல், ஐரோப்பா லீக்கின் 16 அணிகள் சுற்றில் ஸ்பார்டா ப்ராக்கை எதிர்கொள்கிறது. குரூப் ஈ பிரிவில் லிவர்பூல் அணி ஆறு போட்டிகளில் நான்கு வெற்றிகளை பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தது.

ஸ்பார்டா ப்ராக் அணி குரூப் சி பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்தது. இந்தப் போட்டியில் பங்கேற்க மார்ச் 7 அன்று செக் குடியரசு நாட்டிற்கு முதல் கட்டமாக லிவர்பூல் அணி பயணிக்கும்.

Jurgen Klopps Liverpool face Sparta Prague in the last 16 of the Europa League

குரூப் பி பிரிவில் ஆறு போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்று 13 புள்ளிகளுடன் முதல் இடத்தை பெற்ற பிரைட்டன் அணி, குரூப் ஜி பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்த ரோமா அணிக்கு எதிராக ஆட உள்ளது.

பிரைட்டன் அணி ஐரோப்பா லீக் கால்பந்து தொடரில் மார்சேல், அஜாக்ஸ் மற்றும் ஏஇகே ஏதென்ஸை, "பி" பிரிவில் வீழ்த்தி இருந்தது. அந்த பிரிவில் முதல் இடத்தை பிடித்து ரோமா அணிக்கு எதிரான 16 அணிகள் சுற்றுப் போட்டியில் பங்கேற்க இத்தாலிய தலைநகருக்கு செல்கிறது.

16 அணிகள் சுற்று இரண்டு கட்டமாக நடைபெறும். இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும், ஒரே அணியுடன் இரண்டு முறை மோதும். அதில் அதிக புள்ளிகள், வெற்றிகள் மற்றும் கோல் அடிக்கும் அணி கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். ஐரோப்பா லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி மே 22ஆம் தேதி டப்ளினில் நடைபெற உள்ளது. லிவர்பூல் அணி இறுதிப் போட்டி வரை முன்னேறும் என்பதே பலரின் கணிப்பாக உள்ளது.

Story first published: Friday, February 23, 2024, 18:25 [IST]
Other articles published on Feb 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+