Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாலாஹின் ஜெராக்ஸ்.... ஈராக்கை கலக்கும் கால்பந்து வீரர்!

பாக்தாத்:ஈராக்கில் உள்ள ஒரு கால்பந்து அணிக்காக விளையாடும் ஹூசைன் அலி, தெருவில் நடந்தாலே, ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்பி எடுக்கத் துவங்கி விடுகின்றனர். இவர் ஏன் ரஷ்யாவுக்கு போகவில்லை என்ற சந்தேகமும் ஏற்படும்.

இதற்கு ஒரே காரணம், பிபா உலகக் கோப்பையில் எகிப்து அணிக்காக விளையாடும் மொகம்மது சாலாஹை ஜெராக்ஸ் எடுத்தது போல் இருப்பதுதான்.

look alike of salah in iraq,

தற்போது உலக அளவில் தலைச் சிறந்த வீரர்கள் என்று பட்டியலிட்டால், அதில் டாப்பில் இருப்பவர்களில் ஒருவர்தான் எகிப்து அணிக்காக விளையாடும் மொகம்மது சாலாஹ். லிவர்பூல் அணியின் முக்கிய வீரராகவும் உள்ளார்.

ஈராக்கின் பாக்தாத் நகரைச் சேர்ந்த ஹூசைன் அலி, சிறு வயதில் இருந்தே கால்பந்து ரசிகர். அங்குள்ள உள்நாட்டு கிளப்புக்கு பயிற்சியில் சேர சென்றுள்ளார். அப்போதுதான், நீ சாலாஹ்தானே என்று கோச் கேட்டுள்ளார்.

அதன்பிறகு பலரும் இதே கேள்வியை கேட்டுள்ளனர். அப்போதுதான், சாலாஹ் மாதிரியே இருப்பதை உணர்ந்த ஹூசைன் அலி, அவரைப் போலவே, ஹேர்ஸ்டைல், தாடி என்று தன்னை மாற்றிக் கொண்டுள்ளார்.

ஈராக்கின் சாலாஹ் என்று அழைக்கப்படும் ஹூசைன் அலி, ஈராக் கால்பந்து கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.

Story first published: Thursday, June 7, 2018, 18:11 [IST]
Other articles published on Jun 7, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+