
50 ஓவர் தொடர்
காரணம்.... அங்கு உலகக்கோப்பை இலங்கை அணியை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கிவிட்டன. அதன் முன்னோட்டமாக சூப்பர் போர் ப்ரொவன் ஷியல் 50 ஓவர் கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கு பின்னரே மலிங்கா ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு திரும்பினார்.

முக்கிய பணி
இந்நிலையில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பைக்கான வெற்றியில் முக்கிய பங்களிப்பை அளித்தார். அதன் பிறகு... ஏற்கனவே திட்டமிட்டவாறு மலிங்கா, இலங்கை கிரிக்கெட்டின் உள்நாட்டு தொடரில் பங்கேற்க இலங்கை பறந்தார்.

2 ரன்கள் தான்
இந்த தொடரில் அவர் காலே அணிக்கு கேப்டனாக உள்ளார். கண்டி அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் மலிங்கா எடுத்ததோ வெறும் 2 ரன்கள் தான். அவர் இடம்பெற்றுள்ள காலே அணி 256 ரன்கள் குவித்தது.

அசத்தல் மலிங்கா
தொடர்ந்து ஆடிய கண்டி அணியை மலிங்கா தமது அற்புத பந்துவீச்சில் கட்டிப்போட்டார். கண்டி அணியின் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேலும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரின் அசாத்திய திறமையால் கண்டி அணி 100 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்தது.

இலங்கையின் அடம்
அனுப்பி வைக்க மாட்டோம் என்று தொடக்கத்தில் அடம்பிடித்த இலங்கை வாரியம் ஒருவழியாக மலிங்காவை அனுப்பி வைத்தது. மும்பை அணியில் பங்கேற்று அணியின் வெற்றிக்கு உதவினார். அந்த போட்டி முடிந்தவுடன், உடனடியாக இலங்கை பறந்த அவர்.... காலே அணியை வெற்றி பெற வைத்தார்.

2 நாடுகளில் மலிங்கா
ஆக மொத்தத்தில் 24 மணி நேரத்தில் இரு வேறு அணிகளில் விளையாடுகிறார். விக்கெட்டுகளை அள்ளுகிறார். அணியின் வெற்றிக்கு உதவுகிறார் லசித் மலிங்கா. 24 மணி நேரம், 2 நாடுகள் என பறந்து, பறந்து விளையாடி வரும் அவரை ரசிகர்களும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications














