பிரீமியர் லீக் போட்டி... வெற்றியுடன் துவக்கியது மான்செஸ்டர் யுனைடெட்!
லண்டன்: பிரீமியர் லீக் கால்பந்து போட்டியின் புதிய சீசனில், 20 முறை முதல் இங்கிலிஷ் முதல் டிவிஷன் சாம்பியனான மான்செஸ்டர் யுனைடெட் வெற்றியுடன் துவக்கி உள்ளது.
இங்கிலாந்தில் புகழ்பெற்ற பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகளின் 2018-2019 சீசன் துவங்கியுள்ளது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியும், லீசெஸ்டர் சிட்டி அணியும் மோதின.

20 முறை இங்கிலிஷ் முதல் டிவிஷன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள மான்செஸ்டர் அணி இந்த ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது.
சமீபத்தில் நடந்த ஃபிபா உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணியின் பால் போக்பா மற்றும் லூக் ஷா ஆகியோர் மான்செஸ்டர் அணிக்கு கோலடித்தனர். சீனியர் பிரிவில் லூக் ஷா அடிக்கும் முதல் கோல் இதுவாகும்.
Story first published: Saturday, August 11, 2018, 13:21 [IST]
Other articles published on Aug 11, 2018


Click it and Unblock the Notifications