For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மெஸ்ஸி, ரொனால்டோ கூட இந்த வயதில் இவ்வளவு கோல்கள் அடித்ததில்லை.. 23 வயது வீரருக்கு பாராட்டு

By Stats Perform

மான்செஸ்டர் : இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடரில் மான்செஸ்டர் சிட்டி அணிக்காக விளையாடும் 22 வயதான நார்வே வீரர் ஏர்லிங் ஹாலாண்ட் நடப்பு சீசனில் அபாரமாக விளையாடி 16 கோல்களை அடித்திருக்கிறார்.இந்த சீசனில் மட்டும் ஹாலாண்ட் 21 கோல்களையும் ஆறு அசிஸ்ட்களையும் அடித்திருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இந்த இடத்தில் இரண்டு மாதம் ஓய்வுக்கு பிறகு தற்போது தான் மான்செஸ்டர் சிட்டி அன்னிக்கு திரும்பி இருக்கிறார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை எவர்டன் அணியுடன் நடைபெற்ற போட்டியில் முதல் முறையாக திரும்பிய ஹாலாண்ட் அபாரமாக விளையாடி இரண்டு கோல்களை அடித்தார்.

Erling Haaland

ஆட்டம் பரபரப்பாக சென்று கொண்டு இருந்த நிலையில் முதல் பாதியில் யாருமே கோல் அடிக்காத நிலையில் இரண்டாவது பாதியில் 71 மற்றும் 85 வது நிமிடத்தில் எர்லிங் ஹாலண்ட் கோல்ட் அடித்து அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார். இந்த நிலையில் செய்தியாளிடம் பேசிய மான்செஸ்டர் சிட்டி அணியின் பயிற்சியாளர் கார்டியோலா ஹாலாண்டுக்கு சில அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்.

ஹாலாண்ட் இளமையான வீரராக இருக்கிறார். தற்போது கடினமான சூழ்நிலையில் அவர் விளையாடிக் கொண்டிருக்கிறார். அவரை சுற்றி எப்போதுமே நான்கு ஐந்து வீரர்கள் இருக்கிறார்கள். தற்போது அவர் காயத்தில் இருந்து மீண்டு வந்திருக்கிறார். களத்தில் அவர் கோல் அடித்தாலும் சரி, அடிக்கவில்லை என்றாலும் சரி, ஆனால் அவர் பதற்றம் இல்லாமல் இருக்க வேண்டும்.

அவர் பதற்றம் இல்லாமல் அமைதியாக இருந்தால்தான். அது அணிக்கு நல்லது மற்ற வீரர்களை உற்சாகப்படுத்துவது எப்போதுமே பாசிட்டிவாக இருப்பது போன்ற உடல் மொழிகளை அவர் கவனம் செலுத்த வேண்டும். அவர் கோல் அடிக்கிறார் என்பதை மட்டுமே அனைவரும் பார்க்கிறார்கள். ஆனால் கோல் மட்டுமல்ல மற்ற வீரர்களை அவர் உற்சாகப்படுத்துவது போன்ற செயல்களையும் மேற்கொள்வார்.

அது எங்கள் அணிக்கு மிகவும் முக்கியம். ஆனால் இரண்டு மாதத்திற்கு பிறகு அவர் அணிக்கு திரும்பியதால் கோல் அடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் தான் இருந்தார். இதன் காரணமாக அவருடைய உடல் மொழியில் பதற்றம் தெரிந்தது. எப்போதும் போல் வீரர்களிடம் அவர் பேசவில்லை. நீங்கள் இந்த போட்டியில் கோல் அடித்தாலும் கோல் அடிக்கவில்லை என்றாலும் பிரச்சனை இல்லை. ஆனால் ஒரு அணியாக அனைவரும் இணைந்து கெட்ட தருணங்களை தாண்டி வர வேண்டும்.

என்னடா இன்றைய ஆட்டத்தில் அவர் இரண்டு கோல் அடித்திருக்கிறார். ஆனால் நான் அவர் குறித்து புகார் அளிக்கிறேன் என்று உங்களுக்கு தோணலாம். அவர் இந்த சீசனில் மட்டும் எத்தனை கோல் அடித்திருக்கிறார். மனதளவில் அவர் பலமான வீரராக இருக்கிறார். ஒரு கோல் அடித்தாலும் இரண்டாவது மூன்றாவது கோல் அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். அவருடைய வயதில் மெஸ்ஸி அல்லது ரொனால்டோவை எடுத்துப் பாருங்கள். இந்த அளவிற்கு அவர்கள் கோள் அடித்தது கிடையாது என்று பெப் கார்டியோலா கூறி இருக்கிறார்.

Story first published: Tuesday, February 13, 2024, 23:33 [IST]
Other articles published on Feb 13, 2024
English summary
Manchester City boss Pep Guardiola urges Erling Haaland to relax
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+