For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்னோட குழந்தை பருவத்தைவிட இப்போ மக்கள் ரொம்ப கஷ்டப்படறாங்க- ராஷ்போர்டு

மான்செஸ்டர் : மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் வீரர் மார்கஸ் ராஷ்போர்டு, ஏழை குழந்தைகளின் உணவுக்காக நிதி திரட்டியுள்ளார். அவரின் இந்த முயற்சி அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

நம்ம ஊரில் இருப்பது போல அங்கும் பள்ளிகளில் மதிய உணவை பெற்றுவந்த குழந்தைகள், தற்போது லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளதால், உணவின்றி வாடி வருகின்றனர்.

Manchester United forward Marcus Rashford raises Funds to Feed Vulnerable Children

இதையடுத்து தனியார் தொண்டு நிறுவனம் மூலம் மார்கஸ் ராஷ்போர்டு 1.4 கோடி ரூபாய் நிதியை திரட்டியுள்ளார். இதன்மூலம் 6 லட்சம் குழந்தைகளுக்கு உணவு அளிக்கப்படும்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள் ஏப்ரல் 30 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெற்றிருந்த மார்கஸ் ராஷ்போர்டு, தற்போது, போட்டி நடத்தப்பட்டால், மீண்டும் விளையாடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக வீட்டில் முடங்கியுள்ள ராஷ்போர்டு தற்போது, சமூக பணிகளுக்காகவும் குரல் கொடுத்து அதை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளார். பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு அளிக்கும் தொண்டு நிறுவனத்துடன் கைகோர்த்துள்ள ராஷ்போர்டு, 1.4 கோடி ரூபாய் நிதியை திரட்டியுள்ளார். இதன்மூலம் 6 லட்சம் குழந்தைகள் உணவை பெறமுடியும் என்றும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

நம்ம ஊர் போலவே அங்கும் பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து ஏழை குழந்தைகளுக்கு உணவு கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்தாட்ட அணியின் வீரர் மார்கஸ் ராஷ்போர்டு அங்குள்ள குழந்தைகளுக்கு உணவளிக்கும் தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் 1.4 கோடி ரூபாய் நன்கொடை திரட்டியுள்ளார்.

அவர் விடுத்த வேண்டுகோளின்படி பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்துள்ளனர். இதையடுத்து இந்த நன்கொடை திரட்டப்பட்டுள்ளது. இந்த நிதியில் 6,00,000 குழந்தைகளுக்கு உணவளிக்க முடியும் என்று ராஷ்போர்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் உணவளித்தவர்களுக்கு நன்றியும் கூறியுள்ளார்.

தான் குழந்தையாக இருந்தபோது, சந்தித்த பிரச்சினைகளைவிட தற்போது மக்கள் அதிகளவில் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர் என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு இரண்டு வேளை உணவு கிடைப்பதுகூட பிரச்சினையாக உள்ளது குறித்து அவர் வேதனையை பகிர்ந்துள்ளார்.

Story first published: Friday, April 3, 2020, 17:00 [IST]
Other articles published on Apr 3, 2020
English summary
Marcus Rashford raises Funds to Feed Vulnerable Children
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+