For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

பார்ட்டிக்கு... தற்கொலைப்படை தீவிரவாதி போல டிரஸ் போட்டு வந்த கால்பந்து வீரர்!

லண்டன்: பிரபலமான மான்செஸ்டர் யுனைட்டெட் கிளப் அணியின் கால்பந்து வீரர் கிறிஸ் ஸ்மாலிங், காஸ்ட்யூ்ம் பார்ட்டிக்கு தற்கொலைப்படை தீவிரவாதி போல உடை அணிந்து வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஆனால் இந்த டிரஸ்ஸுக்கு பலரும் ஆட்சேபனை தெரிவித்ததாலும், முகம் சுளித்ததாலும், தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார். இது முட்டாள்தனமான முடிவு, மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார் ஸ்மாலிங்.

இவருடைய படத்தைப் போட்டு இங்கிலாந்துப் பத்திரிக்கைகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

இவரது உடலில் போலியான ஒரு சர்க்யூட் போர்டையும், செல்போனையும் கட்டி தொங்க விட்டுள்ளனர். பின்னர் உடல் முழுவதும் வயர்களை பின்னிப் பிணைந்துள்ளனர். மேலும், அவரது உடலில் பாட்டில்களையும், ரெட் புல் கேன்களையும் மாட்டி விட்டுள்ளனர். நெற்றியில் அரேபியர்கள் கட்டுவது போல துணியையும் கட்டி விட்டுள்ளனர்.

ஆனால் இது சர்ச்சையைக் கிளப்பியதைத் தொடர்ந்து தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார் ஸ்மாலிங்.

செய்வதையெல்லாம் செய்து விட்டு மன்னிப்பு கேட்டு என்ன பிரயோஜனம் ஸ்மாலிங்...

Story first published: Thursday, January 9, 2014, 12:04 [IST]
Other articles published on Jan 9, 2014
English summary
Manchester United defender Chris Smalling apologised Wednesday for an "insensitive decision" to appear as a suicide bomber at a costume party. A photograph of Smalling in his costume, which his management company said was taken at a private party in his home, was on the front page of Thursday's editions of The Sun.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X