Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"அர்ஜென்டினா நல்லா விளையாடுது... ஆனா இல்லை.."- மரடோனா சொல்கிறார்

ரியோடி ஜெனிரோ: அர்ஜென்டினா என்னவோ போஸ்னியாவுக்கு எதிராக வெற்றி பெற்றது, ஆனால் மேலும் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் என்று அந்த நாட்டின் முன்னாள் வீரரும், கால்பந்து ஜாம்பவானுமான டிகோ மரடோனா தெரிவித்துள்ளார்.

போஸ்னியாவுடனான போட்டியில் அர்ஜென்டினா அணி 2க்கு ஒன்று என்ன கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதில் அர்ஜென்டினாவின் நட்சத்திர ஆட்டக்காரர் மெஸ்சி போட்ட கோல் வெகுவாக புகழப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மரடோனா, அர்ஜென்டினா ஆட்டத்தில் இன்னும் முன்னேற்றம் தேவை. மெஸ்சியின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. அவர் தொடர்ந்து பல கோல்களை அடிப்பது மிகவும் அவசியமாகும்.

Maradona is worried about Argentina defense

இதே போல அகீரோ, கோன் சாலா ஆகியோரும் நன்றாக ஆட வேண்டும். பின்வரிசையில் அர்ஜென்டினா பலவீனமாக இருக்கிறது. அதை சரி செய்ய வேண்டும் என்றார். கடந்த உலக கோப்பையில் மரடோனாதான் அர்ஜென்டினாவின் பயிற்சியாளராக இருந்தார். ஆனால் அந்த அணி கோப்பையை கோட்டைவிட்டதுடன், குறிப்பிடத்தக்க வெற்றியையும் பெற முடியாமல்போனது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, June 17, 2014, 17:34 [IST]
Other articles published on Jun 17, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+