Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வில்லியம்சின் வெற்றி வழி... பெங்களூருவை வீழ்த்திய மோஹுன் பகன்!

கோவா : ஐஎஸ்எல் 2020 -21 தொடர் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோவாவின் பல மைதானங்களில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது.

நேற்றைய 36வது போட்டி படோர்டா மைதானத்தில் நடைபெற்ற நிலையில் அதில் ஏடிகே மோஹுன் பகன் மற்றும் பெங்களூரு எப்சி அணிகள் மோதின.

இதில் ஏடிகே மோஹுன் பகன் அணியின் வீரர் டேவிட் வில்லியம்ஸ் அடித்த கோலால், அந்த அணி பெங்களூரு எப்சி அணியை அபாரமாக வெற்றி கொண்டுள்ளது.

36வது போட்டி

36வது போட்டி

ஐஎஸ்எல் 2020-21 தொடர் கோவாவின் பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 35 போட்டிகளை கடந்து இந்த தொடர் நடைபெற்று வரும்நிலையில், நேற்றைய தொடரின் 36வது போட்டி படோர்டா மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஏடிகே மோஹுன் பகன் மற்றும் பெங்களூரு எப்சி அணிகள் மோதின.

டேவிட் வில்லியம்ஸ் கோல்

டேவிட் வில்லியம்ஸ் கோல்

இந்த போட்டியில் ஏடிகே மோஹுன் பகன் அணியின் வீரர் டேவிட் வில்லியம்ஸ் 33வது நிமிடத்தில் அடித்த கோல், பெங்களூரு அணிக்கு எதிரான அந்த அணியின் வெற்றியை உறுதி செய்துள்ளது. இந்த தொடரில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வில்லியம்சின் முதல் கோல் இது. அதேபோல பெங்களூரு அணியின் முதல் தோல்வி இது.

3வது இடத்தில் பெங்களூரு எப்சி

3வது இடத்தில் பெங்களூரு எப்சி

நேற்றைய போட்டியின் வெற்றி மூலம் 16 புள்ளிகளை பெற்றுள்ள மோஹுன் பகன் அணி, மும்பை சிட்டி எப்சியுடன் புள்ளிகள் பட்டியலில் ஒன்றிணைந்துள்ளது. இதேபோல பெங்களூரு அணி 12 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. ஏடிகே அணியின் மன்வீர் சிங் ஆரம்பம் முதலே கோல் அடிக்க முயற்சிகளை மேற்கொண்டார்.

33வது நிமிடத்தில் கோல்

33வது நிமிடத்தில் கோல்

மன்வீர் சிங்கின் அடுத்தடுத்த முயற்சிகளை பெங்களூரு கீப்பர் குர்பிரீத் முறியடித்தார். இதையடுத்து டேவிட் வில்லியம்ஸ் 33வது நிமிடத்தில் கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வழி செய்தார். தொடர்ந்து பெங்களூரு அணியும் கோல் அடிக்க விடாமல் போராடியது. 73வது நிமிடத்தில் கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பும் அந்த அணிக்கு பறிபோனது.

Story first published: Tuesday, December 22, 2020, 11:08 [IST]
Other articles published on Dec 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+