For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

வயதில் சிறுசு.... மனதோ பெரிசு..... மாப்பேயின் தாராள குணம்!

ஃபிபா உலகக் கோப்பையில் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியின் மாப்பே, தனக்கு கிடைத்த வருவாயை நன்கொடையாக அளித்துள்ளார்.

டெல்லி: இந்த உலகக் கோப்பையின் மிகச் சிறந்த இளம் வீரரான, பிரான்ஸின் 19 வயதாகும் கிலியான் மாப்பே, தனக்கு கிடைத்த ரூ.3.5 கோடி பரிசை, தொண்டு நிறுவனத்துக்கு அளித்துள்ளார் மாப்பே.

ரஷ்யாவில் நடந்த 21-வது ஃபிபா உலகக் கோப்பையில் பிரான்ஸ் சாம்பியனானது. அந்த அணியின் 19 வயதாகும் கிலியான் மாப்பே, மிகச் சிறந்த இளம் வீரர் விருதைப் பெற்றார்.

Mbappe donates his earning to charity

மிகவும் இளம் வயதில் உலகக் கோப்பையில் கோலடித்த பிரேசிலின் ஜாம்பவான் பீலேவின் சாதனையை அவர் நெருங்கினார். அதேபோல் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகக் கோப்பை பைனலில் கோலடித்த இளம் வீரர் என்ற பீலேவின் சாதனையையும் அவர் சமன் செய்தார்.

ஏற்கெனவே உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ள மாப்பே, தனது தாராள மனதால் ரசிகர்களை மேலும் ஈர்த்துள்ளார்.

இந்த உலகக் கோப்பையில் பங்கேற்றதன் மூலம் தனக்கு கிடைத்த வருமானம் அனைத்தையும் ஒரு தொண்டு நிறுவனத்துக்கு நன்கொடையாக அளித்துள்ளார் மாப்பே.

பிரீமியர்ஸ் டி கோர்டே என்ற அந்த தொண்டு நிறுவனம், காயமடைந்த மற்றும் ஊனமமடைந்த குழந்தைகளுக்கு இலவசமாக விளையாட்டு பயிற்சிகளை அளித்து வருகிறது.

தனக்கு கிடைத்த, ரூ.3.5 கோடி ரூபாயையும் மாப்பே நன்கொடையாக அளித்துள்ளார்.

Story first published: Tuesday, July 17, 2018, 11:42 [IST]
Other articles published on Jul 17, 2018
English summary
France player mbappe donates his earning to charity.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X