Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அசகாய சூரன் மெஸ்ஸி.. அதுபோன்ற ஆட்டத்தை வாழ்நாளில் பார்த்ததில்லை.. கோல்கீப்பர் மார்ட்டினஸ் பாராட்டு!

தோஹா: அர்ஜென்டினா அணி ஒவ்வொரு போட்டியிலும் முன்னேற்றம் பெற்று வருவதாகவும், மெஸ்ஸியின் ஆட்டத்தை போல் வேறு எங்கும் என் வாழ்நாளில் பார்த்ததில்லை என்று அந்த அணியின் கோல்கீப்பர் எமிலியானோ மார்ட்டினஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்கு அர்ஜென்டினா அணி முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. வலிமையான குரோஷியா அணியை 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முழுக்க முழுக்க அர்ஜென்டினா அணி வீரர்கள் முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தினர். ஆனால் அர்ஜென்டினா அணியின் பயணம் தொடக்கத்தில் அவ்வளவு சிறப்பாக இல்லை.

 அர்ஜென்டினா அணி

அர்ஜென்டினா அணி

உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் சவுதி அரேபியா அணியிடம் அர்ஜென்டினா அணி தோல்வியை சந்தித்தது. இதனால் அர்ஜென்டினா அணி குரூப் சுற்றோடு வெளியேறும் என்று ஏராளமானோர் விமர்சித்தனர். ஆனால் அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறி உள்ளது.

எமிலியானோ மார்ட்டினஸ்

எமிலியானோ மார்ட்டினஸ்

அர்ஜென்டினா அணியின் ஒவ்வொரு வெற்றிக்கும் கோல்கீப்பர் எமிலியானோ மார்ட்டினஸ் முக்கிய காரணமாக இருந்து வருகிறார். குறிப்பாக நெதர்லாந்து அணிக்கு எதிரான காலிறுதி போட்டியில் பென்லாடி ஷூட் அவுட்டில் டான்ஸ் ஆடிக் கொண்டே எதிரணியை தடுத்து நிறுத்தியது, உலகக்கோப்பையின் மாஸ் நிமிடங்களில் ஒன்றாக அமைந்தது.

அணியாக முன்னேறி இருக்கிறோம்

அணியாக முன்னேறி இருக்கிறோம்

இந்த நிலையில் அர்ஜென்டினா கோல்கீப்பர் எமிலியானோ மார்ட்டினஸ் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், நான் அர்ஜென்டினா அணிக்காக ஆட தொடங்கிய நாள் முதல், ஒவ்வொரு ஆட்டத்திலும் முன்னேறி வருவதை கண்கூடாக பார்த்து வருகிறேன். கோபா அமெரிக்கா கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி அல்ல நாங்கள். இப்போது அதைவிடவும் அதிகமாக முன்னேறி இருக்கிறோம்.

திறமையான வீரர்கல்

திறமையான வீரர்கல்

அதேபோல் ஒரு அணியாக பெரிய விஷயங்களில் நம்பிக்கை வைக்க வேண்டும். நம்பிக்கையாக விளையாடும் போது, நமது இலக்கு நம்மை தேடி வந்தடையும். அதேபோல் விளையாட்டை மரியாதையுடனும், இலக்குடனும் விளையாட வேண்டும். எங்களிடம் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

மாயாஜாலக்காரர் மெஸ்ஸி

மாயாஜாலக்காரர் மெஸ்ஸி

தொடர்ந்து மெஸ்ஸியின் ஆட்டம் பற்றிய கேள்விக்கு, மெஸ்ஸி எப்போதும் பிடித்த வீரர். கோபா அமெரிக்கா தொடரில் மெஸ்ஸி செய்த மேஜிக்கள் ஏராளம். ஆனால் உலகக்கோப்பைத் தொடரில் மெஸ்ஸி விளையாடுவது போல், உலகில் வேறு எங்குமே என் வாழ்க்கையில் பார்த்ததில்லை. எப்போது என்ன செய்வார் என்று யாராலும் கணிக்க முடியவில்லை என்று தெரிவித்தார்.

Story first published: Thursday, December 15, 2022, 0:31 [IST]
Other articles published on Dec 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+