For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

மெஸ்ஸிக்கு சிறந்த கால்பந்து வீரர் விருதுப் பட்டியலில் இடம் கிடைக்கவில்லை..12 ஆண்டுகளில் முதல் முறை

ரியோ : கடந்த 12 ஆண்டுகளில் முதல் முறையாக மெஸ்ஸி சிறந்த கால்பந்து வீரர்களுக்கான ஆண்டுப் பட்டியலில் முதல் மூன்று இடங்களை இழந்துள்ளார்.

இதுவரை மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ இடையே தான் போட்டி இருக்கும். இருவரில் ஒருவர் இந்த விருதை கடந்த பத்து வருடங்களாக வென்று வந்த நிலையில், முதல் முறையாக முதல் மூன்று இடங்களுக்குள் மெஸ்ஸியால் நுழைய முடியவில்லை.

Messi not getting a place in top three best footplayer player of the year

2006 முதல் இது வரை ஆறு முறை இந்த விருதை வென்றுள்ளார். இவர் இந்த விருதை வெல்லாத ஆண்டுகளில் ரொனால்டோ வென்று இருக்கிறார். அப்போது, இரண்டாம் இடம் பிடித்து வந்தார் மெஸ்ஸி. இந்த நிலையில், ரொனால்டோ - மெஸ்ஸி என்ற போட்டி முடிவுக்கு வந்து விட்டதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த முறை ரொனால்டோ, லூக்கா மோட்ரிக் மற்றும் முகம்மது சாலாஹ் சிறந்த வீரர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இதில் லூக்கா மோட்ரிக், ரொனால்டோவுடன் இணைந்து ரியல் மாட்ரிட் அணிக்காக ஆடியவர். முகம்மது சாலாஹ் லிவெர்பூல் அணிக்காக சென்ற ஆண்டு 44 கோல்கள் அடித்து கலக்கியவர்.

இந்த முறை லூக்கா மோட்ரிக் வெல்ல அதிக வாய்ப்புள்ளது என சிலர் கூறி வருகிறார்கள். ஒருவேளை, ரொனால்டோ இந்த முறை சிறந்த வீரர் விருது வீரர் வெல்லவில்லை என்றால், கடந்த பத்து ஆண்டுகளாக இருந்த ரொனால்டோ, மெஸ்ஸி என்ற போட்டி ஒரு முடிவுக்கு வந்ததாகவே எடுத்துக் கொள்ளலாம்.

Story first published: Tuesday, September 4, 2018, 11:15 [IST]
Other articles published on Sep 4, 2018
English summary
Messi not getting a place in top three best footplayer player of the year. This is the first time he miss this in the last 12 years.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X