Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மெஸ்ஸி VS ரொனால்டோ.. முடிவுக்கு வந்த ‘GOAT’மோதல்! அர்ஜெண்டினா வெற்றியும் புது "போரும்"

கத்தார்: ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜெண்டினா வெற்றி பெற்றதை அடுத்து மெஸ்ஸியின் ரசிகர்கள் திடீரென ரொனால்டோவை ட்ரெண்டாக்க தொடங்கியுள்ளனர்.

ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நேற்று அர்ஜெண்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் அர்ஜெண்டினா 3வது முறையாக கோப்பையை வென்று அசத்தியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் 36 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது அர்ஜெண்டினா.

மெஸ்ஸியுடைய கனவு

மெஸ்ஸியுடைய கனவு

இந்த உலகக்கோப்பை அர்ஜெண்டினா அணிக்காக வெல்வதை விட, லியோனல் மெஸ்ஸிக்காக வென்றே தீர வேண்டும் என்பது தான் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. 35 வயதாகும் அவர் 18 ஆண்டுகளாக கால்பந்தில் மாயாஜாலம் செய்தும் உலகக்கோப்பையை வெல்லவில்லை. இதனைவிட மிக முக்கியமான ஒரு விஷயம் ரொனால்டோவுடனான 'கோட்' பஞ்சாயத்து தான்.

என்னதான் பிரச்சினை

என்னதான் பிரச்சினை

கால்பந்தில் ரொனால்டோ & மெஸ்ஸி ரசிகர்களிடையே யார் சிறந்தவர் என்ற போட்டி நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதற்கேற்றார் போல போர்ச்சுகல் அணி கேப்டன் ரொனால்டோ, அந்த அணிக்காக கடந்த 2016ம் ஆண்டு ஈரோ கப் மற்றும் 2019ல் நேஷனல் லீக் என 2 தொடர்களில் கோப்பையை வென்று முன்னிலை பெற்றார். எனவே 2 கோப்பை வென்றால் தான் ரொனால்டோவை ஈடுகட்ட முடியும் என மெஸ்ஸி விமர்சனத்திற்கு உள்ளானார்.

ஒரு கோப்பை தேவை

ஒரு கோப்பை தேவை

இதில் கடந்தாண்டு (2021) நடைபெற்ற கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரில் அர்ஜெண்டினாவுக்கு கோப்பையை வென்று கொடுத்து ஒரு இடத்தை ஈடுகட்டினார். ஓய்வு பெறுவதற்குள் இன்னும் ஒரு சாம்பியன் கோப்பையை வென்றுக்கொடுத்து விட வேண்டுமே என்ற அவரின் தாகம், சரியாக ஃபிஃபா உலகக்கோப்பை எனும் மிகப்பெரிய கவுரவத்துடன் நிறைவுக்கு வந்துள்ளது.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

இதனையடுத்து ரொனால்டோவுடனான GOAT பிரச்சினையில் மெஸ்ஸியும் சலைத்தவர் இல்லை, இத்துடன் அந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. இதனையடுத்து ரொனால்டோவின் பெயரை குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதற்கான பதிலடியை ரொனால்டோ கொடுப்பாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Story first published: Monday, December 19, 2022, 10:56 [IST]
Other articles published on Dec 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+