For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களுடன் கசமுசா.. சர்ச்சையில் சிக்கிய மெக்சிகோ கால்பந்து வீரர்கள்

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக ரஷ்யா புறப்படுவதற்கு முன் பெண்களுடன் மெக்சிகோ வீரர்கள் உல்லாசமாக இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி:

பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் மெக்சிகோ அணி வீரர்கள், ரஷ்யாவுக்கு புறப்படுவதற்கு முன், ஜாலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது சர்ச்சையாகி உள்ளது.

பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் வரும் 14ம் தேதி துவங்குகிறது. உலகக் கோப்பையை வெல்வதற்காக 32 நாடுகள் களமிறங்க உள்ளன.

Mexico footballers hit by prostitute scandal

வட அமெரிக்க நாடான மெக்சிகோ, எப் பிரிவில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி, ஸ்வீடன், தென்கொரியா ஆகிய அணிகளுடன் உள்ளது. இதுவரை உலகக் கோப்பையில் காலிறுதிக்கு மேல் தாண்டாத மெக்சிகோ அணி, இந்த முறை சாதித்து காட்டுவோம் என்ற வெறியுடன் உள்ளது.

இந்த நிலையில், ரஷ்யாவுக்கு புறப்படுவதற்கு முன், மெக்சிகோ அணி வீரர்களுக்கு, பேர்வெல் பார்ட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அதில் தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தப் பார்ட்டியில் 30க்கும் மேற்பட்ட பாலியல் தொழில் செய்யும் பெண்கள் கலந்து கொண்டுள்ளனர்.

உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெற்றுள்ள பல வீரர்களும் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு ஜாலியாக இருந்துள்ளனர். இதுதான் தற்போது மெக்சிகோ நாட்டு பத்திரிகைகளில் நாறிக் கொண்டிருக்கிறது.

"அன்றைய தினம் பிரீ தினமாகும். வீரர்கள் பிரீயாக இருந்துள்ளனர். இதற்கெல்லாம் நடவடிக்கை எடுக்க முடியாது" என்று, மெக்சிகோ கால்பந்து கூட்டமைப்பு கூறியுள்ளது.

இவ்வாறு பாலியல் தொழில் பெண்களுடன் கால்பந்து வீரர்கள் சிக்குவது என்பது மெக்சிகோவுக்கு புதிதல்ல. 2010ல் ஒரு போட்டியில் பெற்ற வெற்றியை இதுபோன்றுதான் மெக்சிகோ வீரர்கள் கொண்டாடினர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதைத் தவிர இரண்டு பேருக்கு 6 மாதம் விளையாட தடை விதிக்கப்பட்டது.

அதேபோல் 2011 ஜூனில், கோபா அமெரிக்கா போட்டியில் பங்கேற்க அர்ஜென்டீனா சென்றபோதும், இதுபோல் மெக்சிகோ வீரர்கள் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போதும் உல்லாசமாக இருந்த வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், 6 மாதம் விளையாட தடையும் விதிக்கப்பட்டது.

Story first published: Wednesday, June 6, 2018, 18:22 [IST]
Other articles published on Jun 6, 2018
English summary
Mexico football team had a farewell party with prostitutes.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+