Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக்கோப்பை.. இதுவரை டிக்கெட் விற்பனை எவ்வளவு தெரியுமா? விமர்சனங்களுக்கு கத்தார் கொடுத்த பதிலடி!

தோஹா: ரசிகர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக, உலகக்கோப்பையை நேரில் காண வருவோரின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிக்கெட் விற்பனை பற்றி தகவல் பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

200 நாடுகளுக்கும் அதிகமாக கால்பந்து விளையாடி வருவதால், பொருளாதார ரீதியாகவும் ரசிகர்கள் எண்ணிக்கையிலும் உலகின் பிரபலமான விளையாட்டாக திகழ்ந்து வருகிறது.

அந்த வகையில் கால்பந்து வீரர்களின் உச்சபட்ச திறமையை வெளிப்படுத்தும் ஃபிபா உலகக்கோப்பைத் தொடர் கத்தாரில் தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் கத்தார் அணியை ஈகுவடார் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

கத்தார் சர்ச்சை

கத்தார் சர்ச்சை

இதனிடையே கத்தார் உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னதாக சர்ச்சைகள் நிலவி வருகிறது. ஆடைக் கட்டுப்பாடு, பாலியல் கட்டுப்பாடு, எல்ஜிபிடி+ தடை, மதுபானத்திற்கு தடை என ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கு சர்வதேச ரசிகர்கள் மட்டுமல்லாமல் வீரர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ரஷ்யாவை வீழ்த்திய கத்தார்

ரஷ்யாவை வீழ்த்திய கத்தார்

இதன் காரணமாக கால்பந்து உலகக்கோப்பைத் தொடரை நேரில் காண வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறையும் என்றும், சுற்றுலா பயணிகளின் வருகை இருக்காது என்றும் விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் நடைமுறையில் கத்தார் உலகக்கோப்பை தொடருக்கான விக்கெட் விற்பனை சாதனை படைத்துள்ளது. 2018ம் ஆண்டு கால்பந்து உலகக்கோப்பை நடைபெற்ற ரஷ்யாவில் மொத்தமாக 2.4 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

வருவாய் எவ்வளவு?

வருவாய் எவ்வளவு?

ஆனால் இதுவரை கத்தார் உலகக்கோப்பை தொடருக்கான டிக்கெட்டுகளில் 2.95 மில்லியன் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஃபிபா அமைப்பு 7.5 பில்லியன் டாலர்கள் வருவாயாக கிடைத்துள்ளது. இதற்கு 64 போட்டிகள் 29 நாட்களில் நடப்பது முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

கத்தாரில் குவிந்த ரசிகர்கள்

கத்தாரில் குவிந்த ரசிகர்கள்

இந்த டிக்கெட் விற்பனையில் கத்தார், சவுதி அரேபியா, அமெரிக்கா, மெக்சிகோ, ஐக்கிய அரபு அமீரகம், அர்ஜென்டினா, பிரான்ஸ், இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாட்டில் இருந்து அதிகளவிலான கால்பந்து ரசிகர்கள் கத்தாரில் குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் கத்தாரில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக பெண் ரசிகைகளின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே இருப்பதாக கூறப்படுகிறது.

Story first published: Monday, November 21, 2022, 20:56 [IST]
Other articles published on Nov 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+