Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஃபிபா உலகக் கோப்பை.... இன்றைய ஆட்டம் - ஈரானுடன் மொராக்கோ மோதல்!

Recommended Video

ஃபிபா உலகக் கோப்பை....இன்றைய ஆட்டங்கள்- வீடியோ

சென்னை: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் பி பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் மொராக்கோ மற்றும் ஈரான் அணிகள் மோதுகின்றன.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

morocco to face iran in the Fifa world cup

இந்த உலகக் கோப்பைக்கான ஆட்டங்கள் துவங்கியுள்ளன. இன்று நடக்கும் ஆட்டத்தில் மொராக்கோ மற்றும் ஈரான் அணிகள் மோதுகின்றன.

பிரிவு பி
மொராக்கோ - ஈரான்
போட்டி நடக்கும் நேரம் - இந்திய நேரப்படி இரவு 8.30 மணி

உலகக் கோப்பையில் மொராக்கோ இதுவரை விளையாடியுள்ள 13 ஆட்டங்களில் 2ல் மட்டுமே வென்றுள்ளது. 7ல் தோல்வியும், 4ல் டிராவும் செய்துள்ளது.
அதே நேரத்தில் ஈரான் இதுவரை விளையாடிய 12 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. 8ல் தோல்வி, 3ல் டிரா செய்துள்ளது. 1998ல் அமெரிக்காவுக்கு எதிராக அது வென்றது.

முக்கிய வீரர்கள்

மொராக்கோ - அணியின் மிகவும் முக்கியமான வீரர் ஹகிம் ஜையீச். கிளப் போட்டிகளில் கடந்த சீசனில் 9 கோல்களை அடித்ததுடன், 15 கோல்களை அடிப்பதில் உதவி செய்துள்ளார்.

ஈரான் - இந்த உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று ஆட்டங்களில் 8 கோல்கள் அடித்து அசத்தினார் மெஹ்தி தரேமி.

இந்த உலகக் கோப்பைக்கான பி பிரிவில் ஸ்பெயின், போர்ச்சுகல் அணிகளுடன் மொராக்கோ மற்றும் ஈரான் பங்கேற்கின்றன. நம்முடைய கதை முதல் சுற்றோடு முடிந்து விடும் என்று இரு அணிகளும் நினைத்தன.

ஆனால் கோச் பிரச்னையில் ஸ்பெயின் சிக்கியுள்ளது. உலகக் கோப்பை துவங்குவதற்கு முதல் நாளில் ஜூலென் லோபடேகய் நீக்கப்பட்டு புதிய கோச்சாக பெர்னான்டோ ரூயில் ஹியரோ நியமிக்கப்பட்டுள்ளார்.

அதனால், இந்தப் பிரிவில் 2-வது இடம் கிடைக்குமா என்ற நப்பாசையில் மொராக்கோ மற்றும் ஈரான் உள்ளன. 1998க்குப் பிறகு உலகக் கோப்பையில் மொராக்கோ பங்கேற்கிறது. அதே நேரத்தில் ஈரான் தொடர்ந்து இரண்டாவது உலகக் கோப்பையில் விளையாடுகிறது.

இன்றைய ஆட்டத்தில் வென்றாலும், மற்ற இரண்டு ஆட்டங்கள் இரு அணிகளுக்குமே சிக்கலானதுதான்.

Story first published: Friday, June 15, 2018, 7:43 [IST]
Other articles published on Jun 15, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+