
மாடிக்கை வாரிய மாடாஸ்
செர்பியாவைச் சேர்ந்தவர் மாடிக். அவரை ஜாலியாக கிண்டலடித்துள்ளார் மாடாஸ். ஏப்ரல் 30ம் தேதி வரை பிரிமீயர் லீக் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் வீரர்கள் வீடுகளுக்குள் முடங்கிப் போயுள்ளனர். பயிற்சி எடுக்கவும் வெளியில் போக முடியவில்லை. இந்த நிலையில் ஒரு வேளை போட்டிகள் நடத்தப்படுமாயின் பிட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக தனிப்பட்ட முறையில் வீரர்கள் பாதுகாப்பான முறையில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
View this post on InstagramEvery day is a gym day #stayhome #puma
A post shared by Nemanja Matic (@nemanjamatic) on
போட்டோஸ் போட்ட மாடிக்
அதேபோல மாடிக்கும் பயிற்சி செய்து அது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார். தினசரி ஜிம்மில்தான் பொழுது கழிகிறது என்று கேப்ஷன் போட்டுள்ளார். விடுவாரா நம்ம மாடாஸ். கலாய்க்க ஆரம்பித்து விட்டார். உடனே வந்தார் கமெண்ட்டுடன். தினசரி ஜிம்முக்குப் போக வேண்டியது.. போட்டோ எடுக்க வேண்டியது.. பிறகு வீட்டுக்கு வந்து சோபாவில் படுத்துத் தூங்க வேண்டியது என்று கலாய்த்துத் தள்ளி விட்டார்.

பராசக்தி படத்துலேயே பாத்தாச்சு
அத்தோடு விடவில்லை.. இதெல்லாம் சிவாஜி கணேசன் காலத்திலேயே பார்த்துட்டோம் என்று விவேக் காமெடி வசனம் பேசுவாரே அதுபோல, இதெல்லாம் பழைய டிரிக் என்றும் கூறி மாடிக்கை வாரியுள்ளார். இதற்கு மார்கஸ் ராஷ்போர்ட் என்ற இன்னொரு வீரர் வந்து பதில் கமெண்ட் போட்டார். அதில், உண்மைதான்.. நாங்கெல்லாம் பயிற்சி பெறவே தேவையில்லை.. இயற்கையிலேயே மாஸ்ட்ரோ என்று பதிலுக்கு கலாய்த்துள்ளார்.

நமக்குத்தான் பொழுதே போகலை
என்னவோ நல்லாத்தான் பொழுது போகுது போல இந்த வீரர்களுக்கு.. மக்களுக்குத்தான் பொழப்பு போச்சு.. வீட்டையும் விட்டு வெளிவர முடியலை. எங்கும் போக முடியலை, கிரிக்கெட், கால்பந்து பார்க்க முடியலை.. தியேட்டர்களுக்குப் போகலாம் என்றால் சினிமாவும் இல்லை. ரோட்டிலும் நடக்க முடியலை.. நடந்தா போலீஸ் அடிக்குது.. இதனால் டிக்டாக் செய்து கொண்டும், போனை நோண்டிக் கொண்டும் பொழுது போக்க வேண்டியுள்ளது.


Click it and Unblock the Notifications













