Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதிரடி காட்டிய ஜாம்ஷெட்பூர்... அடங்கிபோன மும்பை சிட்டி... ஆனாலும் போட்டி டிரா!

பேம்போலிம் : ஐஎஸ்எல் 2020-21 தொடரின் 28வது போட்டி நேற்றைய தினம் ஜாம்ஷெட்பூர் மற்றும் மும்பை சிட்டி அணிகளுக்கிடையில் நடைபெற்றது.

இதில் முதலில் கோல் போட்டு ஜாம்ஷெட்பூர் அணி முன்னிலை வகித்த நிலையில், அந்த கோலை மும்பை சிட்டி சமன் செய்து போட்டியை டிரா செய்தது.

Mumbai City FC held 1-1 by 10-man Jamshedpur

இதையடுத்து ஐஎஸ்எல் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை மும்பை சிட்டி அணி தக்கவைத்துள்ளது. ஜாம்ஷெட்பூர் அணி 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஐஎஸ்எல் 2020-21 தொடரின் 28வது போட்டி நேற்றைய தினம் நடைபெற்ற நிலையில், அதில் போட்டியிட்ட மும்பை சிட்டி மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகள் தலா ஒரு கோல் போட்டு போட்டியை சமன் செய்துள்ளன. முதலில் சிறப்பாக விளையாடிய ஜாம்ஷெட்பூர் அணி வீரர் நெரிஜூஸ் வால்ஸ்கிஸ் கோல் போட்டு அந்த அணியை முன்னிலை வகிக்க செய்தார்.

ஆனால் மும்பை அணி வீரர் பார்த்தோலோமியூ அடித்த கோலால் போட்டி டிரா ஆனது. இந்த போட்டி மூலம் மும்பை சிட்டி அணி முதலிடத்தை தக்க வைத்துள்ளது. ஜாம்ஷெட்பூர் அணியோ 7 புள்ளிகளுடன் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. போட்டியில் மும்பை அணியின் கோச் செர்ஜியோ லோபெரா சில மாற்றங்களை செய்துள்ளார். மிட்பீல்டரை நீக்கிவிட்டு வெளிநாட்டு வீரர்களை அவர் களமிறக்கியிருந்தார்.

Story first published: Tuesday, December 15, 2020, 18:49 [IST]
Other articles published on Dec 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+