Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விபத்தில் கொள்ளுப் பேத்தி மரணம்-தெ. ஆ விளையாடும் போட்டிக்கு மண்டேலா வர மாட்டார்

Zenani with Mandela
ஜோஹன்னஸ்பர்க்: 13 வயதான தனது கொள்ளுப்பேத்தி உலகக் கோப்பை போட்டி தொடக்க விழாவை பார்வையிட்டு விட்டு திரும்புகையில் சாலை விபத்தில் உயிரிழந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ள முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா தென் ஆப்பிரிக்கா- மெக்சிகோ மோதும் உலகக் கோப்பைப் போட்டியைப் பார்வையிட வர மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஜோஹன்னஸ்பர்க்கில் 19வது உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் மண்டேலாவின் பேத்தி ஜின்ட்சி மண்டேலாவின் 13 வயது மகள் ஜெனானி மண்டேலா, முன்னாள் மனைவி வின்னி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடக்க விழாவைப் பார்வையிட்டு விட்டு ஜெனானி உள்ளிட்டோர் கார்களில் வீடு திரும்பியபோது ஜெனானி, வின்னி பயணித்த கார் விபத்துக்குள்ளானது. இதில் ஜெனானி உயிரிழந்தார். வின்னி காயமடைந்தார். அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான காரின் டிரைவர் குடிபோதையில் இருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கொள்ளுப் பேத்தி மரணமடைந்த செய்தியைக் கேட்டு மண்டேலா அதிர்ச்சி அடைந்துள்ளதாக மண்டேலா பவுண்டேஷன் தெரிவித்துள்ளது. தனது கொள்ளுப்பேத்தியின் மரணத்தால் துயரமடைந்துள்ள மண்டேலா, இன்று நடைபெறும் தென் ஆப்பிரிக்கா- மெக்சிகோ இடையிலான போட்டியைக் காண அவர் வர மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+